ETV Bharat / state

சட்டப்பேரவை நிகழ்வுகள் உடனுக்குடன்! #LiveUpdates - admk

assembly
author img

By

Published : Jul 19, 2019, 10:37 AM IST

Updated : Jul 19, 2019, 4:59 PM IST

10:13 July 19

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன் இன்றைய முக்கிய நிகழ்வுகள், வெளியாகும் அறிவிப்புகள், விவாதங்கள் ஆகியவற்றை உடனுக்குடன் வழங்குகிறது ஈடிவி பாரத் தமிழ்.

4:23 

  •  பேரவை முடிவடைந்தது. 

4:00

  •  2.34 கோடியில் பெரிய நாயக்கன் பாளையம் மற்றும் தொண்டாமுத்தூர் பகுதியில் ஒரூர்தி தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

3:51

  • ரூ.1.26 கோடி செலவில் சேலத்தின் மின் ரோந்து நடைமுறை அனைத்து பகுதிகளிலும் உள்ள காவல் ஆணையரகத்தில் செயல்படுத்தப்படும்.

3:49

  • ரூ.25 லட்சம் செலவில் காவல் வாகன மேலாண்மை மற்றும் சொத்து மேலாண்மை ஆகிய பகுதிகளில் தானியக்கமாக அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

3:47 

  • காவல் நிலையம் மற்றும் சிறப்பு பிரிவுகளில் களப்பணியில் ஈடுபட்டுள்ள 72 ஆயிரம்  காவல்துறையினருக்கு மாதம் 5 லிட்டர் பெட்ரோலுக்கு உண்டான செலவு, எரிபொருள் படியாக வழங்கப்படும். இதற்காக ரூ.30 கோடி ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

3:47

  • ரூ.91.74 லட்சம் செலவில் திருப்பூர் மாவட்டத்தில் சைபர் கிரைம் பிரிவு ஒன்று ஏற்படுத்தப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

3:44

  •  தீயணைப்பின் போது வீரமரணம் அடைந்த தீயணைப்பு வீரர்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தப்பட்டு வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3:43 

  • ரூ. 1 கோடி செலவில் தீ விபத்து மற்றும் மீட்பு பணிகளை வானிலிருந்து கண்காணிக்க 50 ஆளில்லா விமானங்கள் வாங்கப்படும் என அறிவிப்பு

 3:34 

  • காவல் துறையினருக்கு பணிச்சுமையால் ஏற்படும் மன அழுத்தத்தை கருத்தில் கொண்டு உளவியல் ரீதியான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே முதல் முறையாக தமிழகத்தில் தான் இது தொடங்கப்பட்டுள்ளது - முதல்வர்

3:17

  • ஆட்சிக்கு வர மறைமுகமாக எப்படி திட்டம் போட்டீர்கள் என அனைவருக்கும் தெரியும் என திமுக மீது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்

2:55 

  • குட்கா வழக்கை லஞ்ச ஒழிப்புத் துறை சரியாக விசாரிக்கவில்லை என்று நீதிபதி தான் சிபிஐ-க்கு மாற்றினார்: முதலமைச்சர்

2:25

  • புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்தை நிர்வகிக்க தனி அலுவலர் நியமிக்கப்படுவார் - முதலமைச்சர் தகவல்

1:42

  • செயின் பறிப்பு சம்பவங்களைத் தடுக்க 2 லட்சம் கேமராக்கள் சென்னையில் பொருத்தப்படும் என முதலமைச்சர் தகவல்

1:36

  • ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவாக செயல்படுவோரின் நடவடிக்கைகள் கூர்ந்து கவனிக்கப்பட்டு வருவதாகவும், அவ்வாறு செயல்பட்ட 36 இளைஞர்களை நல்வழிபடுத்தும் முறைகள் நடைபெற்று வருவதாகவும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மானிய கோரிக்கை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1:25

  • அவை மரபை மீறும் வகையில் நடந்துகொண்ட திமுக உறுப்பினர் செந்தில்பாலாஜிக்கு சபாநாயகர் தனபால் கண்டனம்

1:00

  • தொகுதியில் நடைபெறும் அரசு விழாக்களுக்கு திமுக உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுப்பது இல்லை என பேரவையில் திமுக - அதிமுக இடையே கடும் வாக்குவாதம்.

12:40

  • ஐ.பெரியசாமி: ராமஜெயம் கொலை, பொள்ளாச்சி சம்பவம் ஆகிய விவகாரங்களில் மாநில அரசின் ஒத்துழைப்பு இல்லை. கொடநாடு விவகாரத்தில் ஒரு நிருபர் தன்னை கைதுசெய்து பாருங்கள் என்று சவால் விடுகிறார். 
  • முதலமைச்சர்: அவருக்கு ஜாமீன் போட்டு வெளியே விடுவித்தது நீங்கள் தான், உங்கள் ஆட்கள் தான்.

12:30

  • திமுக எம்எல்ஏ ஐ.பெரியசாமி: சிலை கடத்தல் வழக்கை கையாளும் பொன் மாணிக்கவேலுக்கு அரசு முறையாக ஒத்துழைப்பு வழங்கவில்லை. அரசுக்கு எதிராக அவர் நீதிமன்றம் சென்றதால் அவர் மீது ஈகோ.
  • முதலமைச்சர் பழனிசாமி: சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் 2012-15இல் பணியாற்றியவர் பொன் மாணிக்கவேல். அதன்பின் சிலை கடத்தல் வழக்கின் சிறப்பு அதிகாரியாக 2016இல் நியமிக்கப்பட்டார். அவருக்கு தேவையான உதவிகளை அரசு செய்துள்ளது.

12:16

  • மதுவுக்கு எதிராகப் போராடிய சட்ட மாணவி நந்தினியின் திருமணம் நிற்கும் படி போலீசார் கைது நடவடிக்கை மேற்கொண்டார்கள் - திமுக எம்எல்ஏ ஐ.பெரியசாமி
  • நீதிமன்ற அவமதிப்பால் தான் அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது - சி.வி.சண்முகம் விளக்கம்

12:09 

  • காவல்துறையினருக்கு சொந்த வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 10 மாவட்டங்களில் வீடு கட்டும் திட்டம் தொடங்கப்படும் - முதலமைச்சர்

11:50

  • காவல் துறை மீதான மானிய கோரிக்கை தொடங்கி முதலமைச்சர் பேசி வருகிறார்.

11:45 

  • ஆவடியை மாநகராட்சியாக மாற்றும் சட்ட மசோதாவை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தாக்கல் செய்தார் - அது நிறைவேற்றப்பட்டது.

11:38

  • விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார்.

11:35

  • எச்ஐவி பாதிக்கப்பட்டு உயிரிழந்த குடும்பத்தில் உள்ள அனாதை குழந்தைகளை அரசு தத்தெடுத்து வருவதாக சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா தகவல்

11:30

  • டெங்கு காய்ச்சலால் இந்த வருடம் ஒரு உயிரிழப்பு கூட இல்லை: சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

11:29

  • நீட் தேர்வு இல்லாததால் கால்நடை மருத்துவத்துறை தேர்ந்தெடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் அதற்கான இடங்களை அதிகரிக்க வேண்டும் என்று திமுக எம்எல்ஏ பிச்சாண்டி கோரிக்கை 

11:20

  • இந்தத் தேர்வு தொடர்பான மசோதா வரும்போதே அதிமுக கடுமையாக எதிர்த்தது. 
  • தேசிய எக்சிட் தேர்வை தமிழக அரசு கடுமையாக எதிர்க்கும் - அமைச்சர் விஜயபாஸ்கர் 

11:14

  • வினா விடை நேரம் முடிந்தது
  • பூஜ்ய நேரத்தில் புதிதாக வரவுள்ள நெக்ஸ்ட் தேர்வு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பேசி வருகிறார்
  • இந்தத் தேர்வு கூட்டாட்சி தத்துவத்தை பாதிக்கிறது. எனவே இத்தேர்வை தமிழக அரசு கடுமையாக எதிர்க்க வேண்டும் - ஸ்டாலின் கோரிக்கை

10:30

  • இன்றைய கேள்வி நேரத்தில் அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, அன்பழகன், சரோஜா, காமராஜ், உடுமலை ராதாகிருஷ்ணன், சுகாதரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், துரைக்கண்ணு, ஆர்.பி.உதயகுமார், எம்.ஆர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் பதில் அளிக்கின்றனர்.
  • தமிழகத்தில் நிலவி வரும் முக்கிய பிரச்னைகள் குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானங்களை எதிர்க்கட்சியினர் கொண்டு வர இருக்கின்றனர். 
  • காவல், தீயணைப்பு, மீட்புப் பணிகள் மீதான மானிய கோரிக்கை விவாதம் இன்று நடைபெறுகிறது. 

10:00

தமிழ்நாடு சட்டப்பேரவையை சபாநாயகர் தனபால் திருக்குறள் வாசித்து தொடங்கி வைத்தார்.

Intro:Body:

TN ASSEMBLY LIVE UPDATES

Conclusion:
Last Updated : Jul 19, 2019, 4:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.