ETV Bharat / state

தனபால் தலைமையில் இன்று அலுவல் ஆய்வுக்குழுக் கூட்டம்! - ADMK

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தொடர் வரும் 28ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இன்று தலைமைச் செயலகத்தில் அலுவல் ஆய்வுக்குழுக் கூட்டம் பேரவைத் தலைவர் தனபால் தலைமையில் நடைபெறவுள்ளது.

speaker dhanapal
author img

By

Published : Jun 24, 2019, 10:07 AM IST

தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த பிப்ரவரி மாதம் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, ஓரிரு நாட்கள் மட்டுமே நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் மேற்கொள்ளப்பட்டு தேதி குறிப்பிடாமல் அவை ஒத்திவைக்கப்பட்டது. மக்களவைத் தேர்தல், இடைத்தேர்தல் காரணமாக துறை ரீதியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறாமல் இருந்தது.

இதனிடையே, மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடத்தப்பட்டு, துறை ரீதியாக நிதி ஒதுக்கீடு வழங்குவதற்காக தமிழ்நாடு சட்டப்பேரவை வரும் 28ஆம் தேதி கூடவுள்ளது.

அப்போது, எந்தெந்த துறைகள் தொடர்பான மானியக் கோரிக்கைகள் எந்தெந்த தேதிகளில் விவாதிக்கப்பட வேண்டும் என்பது குறித்த அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் இன்று நண்பகல் 12 மணிக்கு தலைமைச் செயலகத்தில் நடைபெறவுள்ளது.

இக்கூட்டம் பேரவைத் தலைவர் தனபால் தலைமையில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் அவை முன்னவர் ஓ. பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், சட்டப்பேரவை கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

Intro:Body:

speaker dhanapal

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.