சீமானின் நாம் தமிழர் கட்சி, இந்த மக்களவைத் தேர்தலில், 16 லட்சத்து 29 ஆயிரத்து 771 வாக்குகள் பெற்றுள்ளது. இது மொத்தம் பதிவான வாக்குகளில் 3.86 விழுக்காடாகும்.
நாம் தமிழர் கட்சி, கடந்த 2010ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. திரைப்பட இயக்குநரும், நடிகருமான சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளராக இருந்து கட்சியை நடத்திவருகிறார். 2016ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்முறையாக நாம் தமிழர் கட்சி களம் கண்டது. யாருடனும் கூட்டணி வைக்காமல், 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி, முன்னணி கட்சியினரையே நாம் தமிழர் கட்சி திரும்பி பார்க்க வைத்தது. அந்த தேர்தலில், நாம் தமிழர் கட்சி 1.1 விழுக்காடு வாக்குகளை பெற்றிருந்தது.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆறாவது இடத்தில் இருந்த நாம் தமிழர் கட்சி, அதே உற்சாகத்துடன் 2019 மக்களவைத் தேர்தலை எதிர்கொண்டது. தேர்தல் முடிவுகள், மே 23ஆம் தேதி வெளியான நிலையில், 10க்கும் மேற்பட்ட தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி நான்காம் இடத்திற்கு முன்னேறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
எண் | வேட்பாளர் பெயர் | மக்களவைத் தொகுதி | வாக்குகள் | விழுக்காடு |
1 | வெற்றிச்செல்வி | திருவள்ளூர்(தனி) | 65,416 | 4.60% |
2 | காளியம்மாள் | வட சென்னை | 60,515 | 6.30% |
3 | செரின் | தென் சென்னை | 50,222 | 4.50% |
4 | கார்த்திகேயன் | மத்திய சென்னை | 30,886 | 3.90% |
5 | மகேந்திரன் | திருப்பெரும்புதூர் | 84,979 | 6.00% |
6 | சிவரஞ்சனி | காஞ்சிபுரம் | 62,771 | 5.00% |
7 | பாவேந்தன் | அரக்கோணம் | 29,347 | 2.50% |
8 | மதுசூதனன் | கிருஷ்ணகிரி | 28,000 | 2.40% |
9 | ருக்மணி தேவி | தருமபுரி | 19,674 | 1.60% |
10 | ரமேஷ்பாபு | திருவண்ணாமலை | 27,503 | 2.40% |
11 | தமிழரசி | ஆரணி | 32,409 | 2.80% |
12 | பிரகலதா | விழுப்புரம்(தனி) | 24,609 | 2.10% |
13 | சர்புதீன் | கள்ளக்குறிச்சி | 30,246 | 2.50% |
14 | ராசா | சேலம் | 33,890 | 2.70% |
15 | பாஸ்கர் | நாமக்கல் | 38,531 | 3.40% |
16 | சீதாலட்சுமி | ஈரோடு | 39,010 | 3.60% |
17 | ஜெகநாதன் | திருப்பூர் | 42,189 | 3.70% |
18 | நீலகிரி | போட்டியில்லை | ||
19 | கல்யாணசுந்தரம் | கோவை | 60,391 | 4.80% |
20 | சனுசா | பொள்ளாச்சி | 31,399 | 2.90% |
21 | மன்சூர் அலிகான் | திண்டுக்கல் | 54,957 | 4.70% |
22 | கருப்பையா | கரூர் | 38,543 | 3.50% |
23 | வினோத் | திருச்சி | 65,286 | 6.20% |
24 | சாந்தி | பெரம்பலூர் | 53,545 | 4.80% |
25 | சித்ரா | கடலூர் | 34,692 | 3.30% |
26 | சிவஜோதி | சிதம்பரம் (தனி) | 34,471 | 3.24% |
27 | சுபாசினி | மயிலாடுதுறை | 41,056 | 3.70% |
28 | மாலதி | நாகப்பட்டினம் | 51,281 | 5.10% |
29 | கிருஷ்ணகுமார் | தஞ்சாவூர் | 57,924 | 5.40% |
30 | சக்திபிரியா | சிவகங்கை | 72,240 | 6.60% |
31 | பாண்டியம்மாள் | மதுரை | 42,901 | 4.20% |
32 | சாகுல் அமீது | தேனி | 26,930 | 2.30% |
33 | அருள்மொழி | விருதுநகர் | 53,040 | 4.90% |
34 | புவனேஸ்வரி | ராமநாதபுரம் | 46,385 | 4.30% |
35 | ராசசேகர் | தூத்துக்குடி | 49,222 | 4.90% |
36 | மதிவாணன் | தென்காசி | 59,445 | 5.60% |
37 | சத்யா | திருநெல்வேலி | 49,898 | 4.80% |
38 | ஜெயின்றீன் | கன்னியாகுமரி | 17,069 | 1.60% |
39 | சர்மிளாபேகம் | புதுச்சேரி | 22,857 | 2.89% |
மொத்தம் | 16,63,729 | 3.86% |