ETV Bharat / state

ஆன்லைனில் விற்பனையாகும் சேலத்து மாம்பழம்! - salem-mango-in-online-

சேலம்: உலகப் புகழ்பெற்ற சேலம் மாம்பழம் ஆன்லைன் மூலம் அதிகளவில் விற்பனை செய்யப்படுவதாக மாம்பழ வணிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

மாம்பழமா மாம்பழம் ஆன்லைனில் விற்பனையாகும் சேலத்து மாம்பழம்!
author img

By

Published : Apr 29, 2019, 6:55 PM IST

சேலம் என்றதும் எல்லோருக்கும் நினைவுக்கு வருவது மாம்பழம். தற்போது சேலத்தில் மாம்பழ சீசன் களைகட்ட தொடங்கியுள்ளது. குண்டு மாம்பழம் , அல்போன்சா, பங்கனப்பள்ளி, செந்தூரம், நடுசாலை, இமாம்சந்த் என்று 60க்கும் மேற்பட்ட மாம்பழ வகைகள் சேலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விளைவிக்கப்பட்டு பழ அங்காடிகளில் விற்கப்படுகின்றன.

மாம்பழமா மாம்பழம் ஆன்லைனில் விற்பனையாகும் சேலத்து மாம்பழம்!

ஒவ்வொரு மாம்பழமும் ஒன்றை ஒன்று மிஞ்சும் அளவிற்கு இனிப்புச் சுவையை வழங்குவதால் மாம்பழ பிரியர்கள், சீசன் காலங்களில் தினமும் மாம்பழம் உண்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர். சிலநாள் எப்போதும் மாம்பழம் அதிக அளவில் விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் சேலம் மாவட்டத்தில் மட்டுமல்லாது , திருவள்ளூர், காஞ்சிபுரம், தஞ்சை , திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் மாம்பழங்கள் விளைகின்றன.

இதுகுறித்து மாம்பழ வணிகர் சீனிவாசன் கூறுகையில், " வாடிக்கையாளர்கள் நேரில் வந்து வாங்குவதைவிட ஆன்-லைன் மூலம் மாம்பழங்களை வாங்குவதில் தற்போது ஆர்வம் காட்டுகிறார்கள். ஒரு மாதத்தில் குறைந்தபட்சம் இரண்டு டன் அளவிற்கு ஆன்லைன் மூலம் நாங்கள் மாம்பழ விற்பனை செய்துவருகிறோம். இந்தியாவின் எந்த நகரத்திற்கும் எங்களால் மாம்பழத்தை அனுப்பி வைக்க முடியும் என்பதால் வாடிக்கையாளர்கள், அதிகம் ஆன்லைனில் வாங்குகிறார்கள்" என்று தெரிவித்தார்.

Intro:உலகப் புகழ்பெற்ற சேலம் மாம்பழ வகைகள் ஆன்லைன் மூலம் அதிக அளவில் விற்பனை செய்யப்படுவதாக மாம்பழ வணிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Body:சேலம் என்றதும் எல்லோருக்கும் நினைவுக்கு வருவது மாம்பழம். தற்போது சேலத்தில் மாம்பழ சீசன் களைகட்ட தொடங்கியுள்ளது.

குண்டு மாம்பழம் , அல்போன்சா, பங்கனப்பள்ளி, செந்தூரம், நடுசாலை, பெங்களூரா, இமாம்சந்த் என்று 60க்கும் மேற்பட்ட மாம்பழ வகைகள் சேலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விளைவிக்கப்பட்டு பழ அங்காடிகளில் விற்கப்படுகின்றன.

ஒவ்வொரு மாம்பழமும் ஒன்றை ஒன்று மிஞ்சும் அளவிற்கு இனிப்புச் சுவையை வழங்குவதால் மாம்பழ பிரியர்கள், சீசன் காலங்களில் தினமும் மாம்பழம் என்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர். சிலநாள் எப்போதும் மாம்பழம் அதிக அளவில் விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் சேலம் மாவட்டத்தில் மட்டுமல்லாமது , திருவள்ளூர், காஞ்சிபுரம், தஞ்சை , திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் மாம்பழங்கள் விளைகின்றன.

ஆனால் சேலம் மண்ணில் கனிமச்சத்து அதிகம் கலந்திருப்பதால் மாம்பழங்கள் சுவை மிக்கதாக உள்ளது என்று உணவு மற்றும் வேளாண்மை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாகவே சேலம் மாம்பழம் தனிச் சுவை மிக்கதாக உள்ளது என்றால் அது மிகையல்ல.

சேலம் சின்னக்கடை வீதி பகுதியில் மாம்பழ கடைகள் அதிகம் உள்ளன. மாம்பழங்கள் வாங்குவோரை இந்தப் பகுதியில் அதிகம் காணலாம்.

இந்த ஆண்டு மாம்பழ சீசன் மற்றும் விற்பனை குறித்து மாம்பழ வணிகர் சீனிவாசன் நமக்கு அளித்த பிரத்தியேக பேட்டியில், " வழக்கமாக மாம்பழ சீசன் இந்த ஏப்ரல் மாதத்தில்தான் தொடங்கும் .

அதே போல இந்த ஆண்டும் மாம்பழ சீசன் சேலத்தில் தொடங்கி உள்ளது. இது வரும் ஜூலை மாதம் வரை நீடிக்கும் .

இந்த காலகட்டங்களில் மாம்பழங்களின் வரத்து அதிகம் இருக்கும். ஆனால் வழக்கத்திற்கு மாறாக இந்த ஆண்டு மாம்பழ வரத்து குறைந்துள்ளது.

சரியான நேரத்தில் மழை பெய்யவில்லை என்பதாலும், வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதாலும், மாம்பழ விளைச்சல் குறைவாகவே இந்த ஆண்டு இருப்பதாக தெரிகிறது.

வரத்து குறைவு என்பதால் மாம்பழ விலை அதிகரித்துள்ளது. வாடிக்கையாளர்கள் நேரில் வந்து வாங்குவதை விட ஆன்-லைன் மூலம் மாம்பழங்களை வாங்குவதில் தற்போது ஆர்வம் காட்டுகிறார்கள்.

ஒரு மாதத்தில் குறைந்தபட்சம் இரண்டு டன் அளவிற்கு ஆன்லைன் மூலம் நாங்கள் மாம்பழ விற்பனை செய்து வருகிறோம். இந்தியாவின் எந்த நகரத்திற்கும் எங்களால் மாம்பழத்தை அனுப்பி வைக்க முடியும் என்பதால் வாடிக்கையாளர்கள், அதிகம் ஆன்லைனில் மாம்பழங்களை வாங்குகிறார்கள் "என்று தெரிவித்தார்.

Conclusion:சேலம் மாம்பழ அங்காடிகளுக்கு நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய பகுதிகளில் இருந்தும் வகை வகையான மாம்பழங்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.