சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் என்பது ஏராளமான பொதுமக்கள் வெளி மாநிலங்களில் இருந்தும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வரக்கூடிய ஒரு இடம்.
இதனால் இங்கு ஏராளமான ஆட்டோக்கள் பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக காத்திருக்கும் வகையில், இன்று வெங்கடேசன் என்கிற ஆட்டோ ஓட்டுனர் பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக காத்திருந்தார். அங்கு வந்த ஜிதேந்திர சிங் என்ற ரயில்வே பாதுகாப்புப் படையைச் சேர்ந்த காவலர் ஆட்டோவை எடுக்கும் படி கூறினார்.
இதனையடுத்து இருவருக்கும் ஏற்பட்ட வாய் தகராறு பிறகு கைகலப்பாக மாறியது. இதில் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். ரயில்வே போலீசார் வெங்கடேசனின் செல்போனை பறித்துக் கொண்டு, அவரது சட்டையை கிழித்துள்ளார்.
இதில் ஆட்டோ ஓட்டுநர் வெங்கடேசன் தப்பிச் சென்றுள்ளார். இந்த சம்பவத்தை பார்த்த பொதுமக்கள் அதிர்ந்து போனர். மேலும் காவலரின் செயலை அங்கிருந்த பொது மக்கள் அனைவரும் தங்கள் செல்போனில் படம்பிடித்தனர்.