ETV Bharat / state

தபால் வாக்கு அளிப்பதில் அதிகாரிகள் மெத்தனம்! 100 விழுக்காடு வாக்குப்பதிவு சாத்தியமா? - govt employers

சென்னை: ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் வாக்குகள் முழுமையாக பதிவு செய்யாமல் தேர்தல் ஆணையம் எவ்வாறு 100 விழுக்காடு இலக்கை எட்டும் என்பது கேள்விக்குறியாகி உள்ளதாக அரசுப் பணியாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

100% வாக்குபதிவு சாத்தியமா?
author img

By

Published : Apr 8, 2019, 8:53 AM IST

தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் ஆசிரியர்களுக்கு நேற்று அளிக்கப்பட்ட இரண்டாம் கட்ட பயிற்சியில் தபால் வாக்குகள் அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால் அனைவருக்கும் தபால் வாக்குகள் அளிக்காமலும், தபால் வாக்கு செலுத்துவதற்குரிய தேர்தல் பணி சான்று அளிக்காமலும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உள்ளனர் எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் மணிமேகலை, பொதுச்செயலாளர் மயில், மாநிலப் பொருளாளர் ஜோதிபாபு ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

’17ஆவது மக்களவைத் தேர்தலுக்குரிய பணிகள் வெகுவேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் தேர்தலுக்கு இன்னும் பத்து தினங்கள் மட்டுமே உள்ள நிலையில் தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்குத் தபால் வாக்குகள் அளிப்பதில் தமிழ்நாடு முழுவதும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் மிகுந்த மெத்தனப் போக்குடனும் காழ்ப்புணர்ச்சியுடனும் நடந்து வருகின்றனர். இதனால் லட்சக்கணக்கான ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்ற முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மார்ச் 24, 31 ஆகிய தேதிகளில் நடைபெற்ற முதல் தேர்தல் பயிற்சி வகுப்பில் தபால் வாக்குக்கோரி படிவம் 12-ல் விண்ணப்பித்த ஆசிரியர்கள், அரசு ஊழியர்களில் பெரும்பாலானோருக்கு ஏப்ரல் 7ஆம் தேதி நடைபெற்ற இரண்டாவது பயிற்சி வகுப்பில் தபால் வாக்குகள் அளிக்கப்படவில்லை. மிகக்குறைந்த எண்ணிக்கையிலேயே தபால் வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. இதனால் மாநிலம் முழுவதும் தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிருப்தியும், கொந்தளிப்பும், ஏமாற்றமும் ஏற்பட்டுள்ளது.

அதேபோன்று சொந்த மக்களவைத் தொகுதியில் தேர்தல் பணியாற்றும் தேர்தல் பணியாளர்கள் முதல் பயிற்சி வகுப்பில் படிவம் 12-ஏ-ல் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கும் தேர்தல் பணி சான்று வழங்கப்பட்டு அவர்கள் பணியாற்றும் வாக்குச்சாவடியிலேயே வாக்களிக்கும் வாய்ப்பும் வழங்கப்படுமா? என்ற சந்தேகம் தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பணிக்குச் செல்லும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மத்தியில் வலுவாக எழுந்துள்ளது.

ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் வாக்குகள் முழுமையாகப் பதிவு செய்யாமல் தேர்தல் ஆணையம் எவ்வாறு 100 விழுக்காடு வாக்குப்பதிவு இலக்கை எட்டும்.

தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் இந்திய குடிமக்கள் என்ற முறையில் வாக்களிக்கும் உரிமை பெற்றவர்கள். அந்த உரிமையை யாராலும் தட்டிப்பறிக்க முடியாது. அவ்வாறு தட்டிப்பறிப்பது என்பது மிகப்பெரிய தேசவிரோதச் செயலாகும்’ எனக் கூறப்பட்டுள்ளது..

திமுக சார்பில் இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குத் தபால் வாக்குகள் செலுத்துவதற்கான தேர்தல் பணி சான்று வழங்குவதில் தாமதம் செய்கின்றனர். எனவே நூறு விழுக்காடு வாக்குப்பதிவு என்பதை இந்தியத் தேர்தல் ஆணையம் நிறைவேற்ற முடியாது.

இதில் தேர்தல் ஆணையம் தலையிட்டுத் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்குத் தபால் வாக்குகளை அளிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தபால் வாக்கு அளிப்பதில் அதிகாரிகள் மெத்தனம்
 ஆணையம் நடவடிக்கை எடுக்க ஆசிரியர்கள் கோரிக்கை

சென்னை,
தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு தபால் வாக்குகளை தேர்தல்  பயிற்சி வகுப்பிலேயே அளிக்க வேண்டும் என ஜாக்டோ ஜியோ அமைப்பு தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தியது.
 அதனைத் தொடர்ந்து முதற்கட்ட பயிற்சியில் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் ஆசிரியர்களின் விபரங்கள் பெறப்பட்டன.
 அவர்களுக்கு நேற்று அளிக்கப்பட்ட இரண்டாம் கட்ட பயிற்சியில் தபால் வாக்குகள் அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால் அனைவருக்கும் தபால் வாக்குகள் அளிக்காமலும், தபால் வாக்கு அழிப்பதற்குரிய தேர்தல் பணி சான்று அளிக்காமலும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உள்ளனர் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
 இதுகுறித்து
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலத்தலைவர் மணிமேகலை, பொதுச்செயலாளர் மயில், மாநிலப்பொருளாளர் ஜோதிபாபு ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பதினேழாவது நாடாளுமன்றத் தேர்தலுக்குரிய பணிகள் வெகுவேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.  தமிழகத்தில் தேர்தலுக்கு இன்னும் பத்து தினங்கள் மட்டுமே உள்ள நிலையில் தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு தபால் வாக்குகள் அளிப்பதில் தமிழகம் முழுவதும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் மிகுந்த மெத்தனப் போக்குடனும் காழ்ப்புணர்ச்சியுடனும் நடந்து வருகின்றனர்.  இதனால் லட்சக்கணக்கான ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்ற முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தேர்தல் ஆணையம் 100 சதவீதம் வாக்குப்பதிவை உறுதி செய்வதற்குரிய பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.  ஆனால் தமிழகத்தில் தேர்தல் பணிக்குச் செல்லும் அலுவலர்களுக்கே தங்கள் வாக்கைச் செலுத்தும் உரிமை மறுக்கப்படுவது என்பது திட்டமிட்ட செயலாக இருக்குமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.
24.3.2019 மற்றும் 31.3.2019 ஆகிய தேதிகளில் நடைபெற்ற முதல் தேர்தல் பயிற்சி வகுப்பில் தபால் வாக்குக்கோரி படிவம் 12-ல் விண்ணப்பித்த ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களில் பெரும்பாலோருக்கு 7.4.2019-ல் நடைபெற்ற இரண்டாவது பயிற்சி வகுப்பில் தபால் வாக்குகள் அளிக்கப்படவில்லை. மிகக்குறைந்த எண்ணிக்கையிலேயே தபால் வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிருப்தியும், கொந்தளிப்பும், ஏமாற்றமும் ஏற்பட்டுள்ளது.
அதேபோன்று சொந்த நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் பணியாற்றும் தேர்தல் பணியாளர்கள் முதல் பயிற்சி வகுப்பில் படிவம் 12¬ஏ-ல் விண்ணப்பித்துள்ளனர்.  அவர்களுக்கும் தேர்தல் பணிச்சான்று வழங்கப்பட்டு அவர்கள் பணியாற்றும் வாக்குச்சாவடியிலேயே வாக்களிக்கும் வாய்ப்பும் வழங்கப்படுமா? என்ற சந்தேகம் தமிழகம் முழுவதும் தேர்தல் பணிக்குச் செல்லும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மத்தியில் வலுவாக எழுந்துள்ளது.
தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் இந்தியக் குடிமக்கள் என்ற முறையில் வாக்களிக்கும் உரிமை பெற்றவர்கள். அந்த உரிமையை யாராலும் தட்டிப்பறிக்க முடியாது. அவ்வாறு தட்டிப்பறிப்பது என்பது மிகப்பெரிய தேசவிரோதச் செயலாகும்.  தேர்தல் பணியில் ஈடுபடும்  ஊழியர்களின் வாக்குகளைப் பறித்துவிட்டு 100 சதவீதம் வாக்குப்பதிவை எட்டுவது என்பது எவ்வாறு சாத்தியமாகும். எனவே, தேர்தல் ஆணையம் இப்பிரச்சனையில் உடனடி கவனம் செலுத்தி தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து ஊழியர்களும் தபால் வாக்குகள் மூலமாகவோ அல்லது தேர்தல் பணிச்சான்று மூலமாகவோ தங்கள் வாக்கைச் செலுத்தி தங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதில் கூறியுள்ளனர்.

திமுக சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தபால் வாக்குகள் செலுத்துவதற்கான தேர்தல் பணி சான்று வழங்குவதில் தாமதம் செய்கின்றனர்.ஆனால் நூறு சதவீதம் வாக்குப்பதிவு என்பதை இந்தியத் தேர்தல் ஆணையம் நிறைவேற்ற முடியாது.
எனவே தேர்தல் ஆணையம் தலையிட்டு தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அவர்களுக்கு தபால் வாக்குகளை அளிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் வாக்குகள் முழுமையாக பதிவு செய்யாமல் தேர்தல் ஆணையம் எவ்வாறு 100 சதவீதம் இலக்கை எட்டும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.