பொள்ளாச்சியில் பெண்களை ஆபாச படம் எடுத்து பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த சம்பவம் தொடர்பாக திருநாவுக்கரசு, சபரி ராஜன், சதீஷ், வசந்த் குமார் ஆகிய நான்கு பேரையும் கோவை மாவட்டக் காவல் துறையினர் கைது செய்து குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக வீடியோவை நக்கீரன் கோபால் வெளியிட்டார். மேலும் இந்த சம்பவத்தில் ஆளும் கட்சி சம்பந்தம் இருப்பதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
இந்நிலையில் இந்த வழக்கில், வீடியோ வெளியிட்டது தொடர்பான விசாரணைக்கு மார்ச் 21ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்று சிபிசிஐடி அழைப்பாணை அனுப்பியுள்ளது.
இந்த வழக்கு மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.