ETV Bharat / state

தென் சென்னையில் கலகலக்கும் தேர்தல் களம்: கட்டுகட்டாக பணப் பட்டுவாடா! - supplying money

சென்னை: தென்சென்னையில் தேர்தல் விதிமுறைக்கு முரணாக பணப்பட்டுவாடா செய்த பிற கட்சியைச் சேர்ந்த இரண்டு நபர்களை அதிமுகவினர் சிறைபிடித்து காவல்துறையில் ஒப்படைத்தனர்.

கட்டுகட்டக பணப் பட்டுவாடா!
author img

By

Published : Apr 16, 2019, 5:42 PM IST

தென் சென்னை தொகுதிக்குட்பட்ட சைதாப்பேட்டை பகுதியில் இரவில் வீடு வீடாகச் சென்று பிற அரசியல் கட்சியைச் சேர்ந்த நபர்கள் பணம் பட்டுவாடா செய்வதாக அதிமுகவினருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் அங்குச் சென்ற அதிமுகவினர், அங்கு வாக்குக்கு தலா ரூபாய் 200 கொடுத்துக் கொண்டிருந்த பாபு, குமார் ஆகிய இரண்டு பேரையும் பிடித்து குமரன் நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

தென் சென்னையில் வாக்குக்கு பணம் விநியோகம்

இதனையடுத்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து இரண்டு பேரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வீடு வீடாகச் சென்று வாக்குக்கு தலா ரூபாய் 200 வழங்கிய காணொளி ஆதாரத்தையும் அதிமுகவினர் காவல் நிலையத்தில் வழங்கியுள்ளனர். அதுமட்டுமின்றி பணம் பட்டுவாடா செய்தவர்களை அதிமுகவினர் பிடிக்கும் போது தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் யாரும் அங்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் விதிமுறைக்கு முரணாக பணப்பட்டுவாட செய்த அமமுக கட்சியை சேர்ந்த 2 பேரை  சிறைப்பிடித்து காவல்துறையில் ஒப்படைத்த அதிமுக வினர். 

தென் சென்னை தொகுதிக்குட்பட்ட சைதாப்பேட்டை பகுதியில் இரவில் வீடு வீடாக  சென்று அமமுகவினர் பணம் பட்டுவாடா செய்வதாக அதிமுகவினருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் அங்கு  அதிமுகவினர் சென்றுள்ளனர். 

அப்போது அங்கு வீடு வீடாக சென்று ஓட்டுக்கு தலா ரூ.200 கொடுத்துக் கொண்டிருந்த அமமுகவை சேர்ந்த பாபு மற்றும் குமார் ஆகிய 2 பேரையும் பிடித்து குமரன் நகர் காவல் நிலையத்தில் அதிமுகவினர் ஒப்படைத்தனர். இதனையடுத்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து 2 பேரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் வீடு வீடாக சென்று ஓட்டுக்கு தலா ரூ.200 வழங்கிய போது அமமுக கட்சியினை சேர்ந்த குமார், பாபு ஆகியோர் பணம் கொடுக்கும்  வீடியோ ஆதாரத்தையும் அதிமுகவினர் காவல் நிலையத்தில் வழங்கியுள்ளனர்.

ஆனால் அமமுக வினர் இந்த சம்பவத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி பணம் பட்டுவாட செய்தவர்களை அதிமுகவினர் பிடிக்கும் போது தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் யாரும் அங்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.