ETV Bharat / state

'உடலுறுப்பு தானம் செய்ய அரசு மருத்துவமனைக்கே முன்னுரிமை' -விஜய பாஸ்கர்

author img

By

Published : Jul 8, 2019, 2:36 PM IST

Updated : Jul 8, 2019, 5:13 PM IST

சென்னை: ராயபுரத்தில் உள்ள ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உடல் உறுப்பு தானம் விழிப்புணர்வு வார விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உடலுறுப்பு தானம் செய்ய வந்தால் அரசு மருத்துவமனைக்கே முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

உடலுறுப்பு தானம் செய்ய வந்தால் அரசு மருத்துவமனைக்கே முன்னுரிமை

இந்த விழாவில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருடன் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரும் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், ஆண்டுதோறும் ஜூலை 1 முதல் 7 ஆம் தேதி வரை உடல் உறுப்பு தான விழிப்புணர்வு - நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. குடும்பத்தில் ஒருவர் இறக்கும்போது உள்ள துயரத்திலும் உடல் உறுப்பு தானம் செய்வதால் 7 முதல் 11 பேருக்கு மறுவாழ்வு அளிக்கிறார்கள். எனவே அப்படிப்பட்ட குடும்பங்களுக்கு இன்றைய அரசு தனது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.

ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உடல் உறுப்பு தானம் விழிப்புணர்வு வார விழா

மேலும் உடல் உறுப்பு தானம் மக்களின் இயக்கமாக மாற வேண்டும் என்பது அரசின் நோக்கமாக உள்ளது. உடல் உறுப்பு தானம் ஆன்லைன் மூலம் மிகவும் வெளிப்படைத்தன்மையாக சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முதலில் உடலுறுப்பு தானம் செய்ய வந்தால் அரசு மருத்துவமனைக்கே முன்னுரிமை அளிக்கப்படும். ஒருவேளை அங்கு நோயாளிகளுக்குத் தேவை ஏற்படவில்லை என்றால்தான் முறைப்படி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படும். இச்செயல் மிகவும் வெளிப்படைத் தன்மையுடனும், எந்த ஒரு குற்றச்சாட்டுக்கும் இடம் இல்லாமலும் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருப்பதால் மத்திய அரசின் விருதை தொடர்ந்து 4 ஆண்டுகளாகத் தமிழ்நாடு பெற்று வருகிறது என்று பெருமிதம் தெரிவித்தார்.

Intro:உடல் உறுப்பு தானம் செய்வது நாடு முழுவதும் ஒரு மக்கள் இயக்கமாக மாற வேண்டும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர்

Body:சென்னை ராயபுரத்தில் உள்ள ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உடல் உறுப்பு தானம் விழிப்புணர்வு வார விழா நடைபெற்றது இதில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர் வருடத்தில் ஜூலை 1 முதல் 7-ஆம் தேதி வரை உடல் உறுப்பு தான விழிப்புணர்வு நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது

தன் மனைவியோடு குடும்ப நபர்களும் இறந்த பிறகு அந்த துயரத்திலும் ஒரு நல்ல முடிவாக உடல் உறுப்பு தானம் செய்வதன் மூலம் 7 முதல் 11 பேர் வரை மறுவாழ்வு அளிக்க கூடிய அந்த குடும்பத்திற்கு இன்றைய அரசு தனது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறது

இந்த உடல் உறுப்பு தானம் மக்களின் இயக்கமாக மாற வேண்டும் என்பது அரசின் நோக்கமாக உள்ளது

ஆன்லைன் மூலம் மிகவும் வெளிப்படைத்தன்மையாக சீனியர் அடிப்படையில் உடல் உறுப்பு தானம் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது

முதலில் உடலுறுப்பு தானம் என்று வந்தால் முதலில் அரசு மருத்துவமனைக்கு தான் விதிகளின்படியும் முன்னுரிமை அளிக்கப்பட்டு செல்லும் அங்கு நோயாளிகளுக்கு தேவை ஏற்படவில்லை என்றால் தான் முறைப்படி தனியார் மருத்துவமனைக்கு தேவையேற்படின் அனுப்பி வைக்கப்படும் இதில் வெளிப்படைத்தன்மையுடனும் எந்த ஒரு குற்றச்சாட்டும் இடம் இல்லாமல் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது

எந்த ஒரு குற்றச்சாட்டுக்கும் இடம் இல்லாமல் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருப்பதால் தான் மத்திய அரசின் சிறந்த விருதை தொடர்ந்து 4 ஆண்டுகளாக தமிழகம் பெற்று வருகிறது

108 ஆம்புலன்ஸ் களைப் பொறுத்தவரையில் 930 ஆம்புலன்ஸ்கள் உள்ளது இதை தவிர இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கரம் ஆம்புலன்சும் அதிநவீன கருவிகளுடன் உள்ள ஆம்புலன்சும் உள்ளது தொடர்ந்து இதுகுறித்து வருகின்ற மானியக் கோரிக்கையில் மிக நல்ல அறிவிப்பை முதல்-அமைச்சர் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்

Conclusion:சென்னை ராயபுரத்தில் உள்ள ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உடல் உறுப்பு தானம் விழிப்புணர்வு வார விழா நடைபெற்றது இதில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்
Last Updated : Jul 8, 2019, 5:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.