ETV Bharat / state

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டு வருகிறது -  ஓ.பி.எஸ்! - ஓ.பி.எஸ்

சென்னை: கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனி வீடுகளாக 16 ஆயிரத்து 695 வீடுகளும், அடுக்கு மாடி வீடுகளாக 28 ஆயிரத்து 671 வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டு வருவதாக இன்று நடைபெற்ற சட்டபேரவைக் கூட்டத்தில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

கஜா புயலா
author img

By

Published : Jul 17, 2019, 8:58 PM IST

ஆதி திராவிடர் பழங்குடியினர் நலத்துறை மானியக் கோரிக்கை விவாதத்தின் போது சட்டப்பேரவை உறுப்பினர் ஆடலரசு பேசுகையில், ’கஜா புயலால் வீடுகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு எத்தனை வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன’ என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த துணை முதலமைச்சர், ஓ.பன்னீர்செல்வம் ”பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு சார்பில் வீடு கட்டிக் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் தனி வீடுகளாகவும் நிலம் இல்லாதவர்களுக்கு அடுக்குமாடி வீடுகளாகவும் கட்டிக் கொடுக்கப்பட்டு வருகிறது என்றார். நிலம் உள்ளவர்களுக்கு 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் வீடு கட்டுவதற்காக காசோலை வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும், நகர பகுதிகளில் தற்போது வரை தனி வீடாக 16 ஆயிரத்து 695 வீடுகளும் அடுக்கு மாடி வீடுகளாக 28 ஆயிரத்து 671 வீடுகளும் கட்டிக் கொடுக்கப்பட்டு வருகிறது எனப் பதிலளித்தார்.

Intro:Body:கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனி வீடுகளாக 16 ஆயிரத்து 695 வீடுகளும், அடுக்கு மாடி வீடுகளாக 28 ஆயிரத்து 671 வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டு வருவதாக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை மானியக் கோரிக்கை விவாதத்தின் போது பேசிய சட்ட மன்ற உறுப்பினர் ஆடல் ஆரசு பேசுகையில், கஜா புயலால் வீடுகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு எத்தனை வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த துணை முதலமைச்சர்
ஓ. பன்னீர்செல்வம், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு சார்பில் வீடு கட்டிக் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, உள்ளிட்ட மாவட்டங்களில் தனி வீடுகளாகவும் நிலம் இல்லாதவர்களுக்கு அடுக்குமாடி வீடுகளாகவும் கட்டிக் கொடுக்கப்பட்டு வருவதாகக் துணை முதலமைச்சர் தெரிவித்தார். நிலம் உள்ளவர்களுக்கு 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் வீடு கட்டுவதற்காக காசோலை வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

நகர பகுதிகளில் தற்போது வரை தனி வீடாக 16 ஆயிரத்து 695 வீடுகளும் அடுக்கு மாடி வீடுகளாக 28 ஆயிரத்து 671வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு வருவதாக துணை முதலமைச்சர் தெரிவித்தார். Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.