அதிமுக கூட்டணிக் கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்குப் புதுச்சேரி பாராளுமன்ற தொகுதி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி வேட்பாளரான கே.நாராயணசாமியை வேட்புமனு தாக்கல் செய்தார்.
இதைத் தொடர்ந்து பல்வேறு பகுதியில் பிரச்சாரம் ஈடுபட்டு வந்த கே.நாராயணசாமியை ஆதரித்து இன்று தமிழக துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் புதுச்சேரியில் மூன்று இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
இதில் பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளரை அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்தால், புதுச்சேரி நீண்ட நாள் கோரிக்கையான தனி மாநில அந்தஸ்து கோரிக்கையை நிறைவேற்றப்படும் என்று கூறினார்.