பயங்கரவாத அமைப்புகளான ஐஎஸ், அல்கொய்தா போன்றவை இந்தியாவில் ஊடுருவி நாச வேலைகளைச் செய்வதற்கு முயற்சி எடுத்து வருகின்றன. நவீன தொழில்நுட்ப யுகத்தில் பல்வேறு வகைகளில் இளைஞர்களை ஈர்த்து அவர்களை குற்றச் செயல்களில் ஈடுபடுத்தி வருகின்றனர்.
இதனைத் தடுக்க தேசிய புலனாய்வு முகமை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. சமீபத்தில் கேரளாவில் பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்புடையதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக கோவையிலும், சென்னையிலும் சிலர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக பலரிடமும் விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில், வஹாபி மார்க்கத்தை போதித்து வருவதாகக் சந்தேகிக்கப்படும் சென்னையில் உள்ள அமைப்புகள் மீது என்ஐஏ அலுவலர்கள் இன்று காலை 6 மணி முதல் சோதனை செய்து வருகின்றனர். சென்னை மண்ணடி லிங்கி செட்டித் தெரு, புரசைவாக்கம் ஆகிய இரண்டு இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக என்ஐஏ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.