சென்னை முகப்பேர் அருகேயுள்ள ஜே.ஜே.நகர் பகுதியில் கோல்டன் ஜார்ஜ் ரத்தினம் ரோடு என்ற இடத்தில், கார்த்திகேயன் என்பவர் எம்.எஸ். ஆட்டோ கேரேஜூம், பால்ராஜ் ஏ.எஸ். மோட்டார்ஸ் பெயிண்டிங் கடையும், விஜய் என்பவர் கார் என்ற மெக்கானிக் கடையும் நடத்திவந்தனர்.
இந்த இடத்தில் இன்று அதிகாலை மூன்று மணியளவில் திடீரென தீப்பிடித்து கார்கள் எரிந்தன. இதனைக் கண்ட பொதுமக்கள் உடனடியாக ஜே.ஜே.நகர் காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு ஜே.ஜே.நகர் மற்றும் கோயம்பேடு என்று வாகனங்கள் விரைந்து வந்து சுமார் இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்தத் தீ விபத்தில் 10 கார்கள் மற்றும் ஒரு சக்கர வாகனம் முழுவதுமாக எரிந்து நாசமாகின. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து ஜே.ஜே.நகர் காவல்நிலைய ஆய்வாளர் சுந்தரேசன் அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்தார்களா? முன் விரோதமா என பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.