தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் அம்மா முழு உடல் பரிசோதனை மையம் தொடங்கப்பட்டு ஓராண்டு முடிவடைந்துள்ளது. இந்நிலையில் முதலாமாண்டு விழா நிகழ்ச்சி ஓமந்தூரார் வளாகத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவமனையில் நடைபெற்றது.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட குடும்பநலத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் முதலாமாண்டு விழாவை தொடங்கிவைத்தார். அப்போது, பிளாட்டினம் பேக்கேஜ் என்னும் புதிய மருத்துவத் திட்டத்தை அவர் தொடங்கிவைத்தார், மேலும், இத்திட்டத்தில் உள்ள பிரிவுகள் குறித்த விவரங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் விநியோகத்தையும் விஜய பாஸ்கர் தொடங்கிவைத்தார்.
பின்னா் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அம்மா முழு உடல் பரிசோதனை மையங்கள் தமிழ்நாடு முழுமையாக உருவாக்கப்படும். புதிதாக பணியில் இணையும் மருத்துவர்கள் கிராமப்புற மக்கள் வசிக்கும் பகுதிகளில் பணியாற்ற முன் வர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.