பொதுமக்கள் வசதிக்காக சென்னைக்கு குடிநீர் வழங்கும் மெட்ரோ வாட்டர் லாரிகளில் கூடுதலாக நான்கு குழாய்கள் வழியாக தண்ணீர் வழங்கும் முறையை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமனி தொடங்கிவைத்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தண்ணீர் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த போதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், ஜோலார்பேட்டையில் இருந்து இரண்டு வாரத்திற்குள் தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
1080 லாரிகள் மூலம் சென்னை மாநகரம் முழுவதும் குடிநீர் விநியோகிக்கப்படுவதாக தெரிவித்த அவர், ஏரி குளங்கள் தொடர்ந்து தூர்வாரப்படுவதாகவும், ஆக்கிரமிப்புகள் விரைவில் அகற்றப்படும் என்றும் தெரிவித்தார்.