ETV Bharat / state

நாற்பதும் நமதே, நாடும் நமதே - அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: நடக்க இருகின்ற நாடாளுமன்றத்தில் 'நாற்பதும் நமதே நாடும் நமதே' என்பதை போல் அனைத்தையும் கைப்பற்றுவோம் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்

அமைச்சர் ஜெயக்குமார்
author img

By

Published : Apr 3, 2019, 9:29 AM IST

மத்திய சென்னை மக்களவை தொகுதி சாம் பாலை ஆதரித்து சென்னை சூளைமேட்டில் அ.தி.மு.க அமைச்சர் ஜெயக்குமார், பா.ம.க இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் பரப்புரையில் ஈடுபட்டனர்.

அமைச்சர் ஜெயக்குமார்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “அனைந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெறும். அ.தி.மு.க வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில் மகத்தான எழுச்சியை காண முடிகிறது. எனவே நாற்பதும் நமதே, நாடும் நமதே என்பதை போல் அனைத்து தொகுதிகளையும் நாங்கள் கைப்பற்றுவோம்.

முன்னாள் அமைச்சர் துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திய போது 10 லட்சம் சிக்கியது. அப்போது துரைமுருகன் வந்தார், எடுத்துக்கொண்டார்கள் என்று பதற்றமின்றி கூறினார். தற்போது அவருக்கு சொந்தமான குடோன்கள், கல்லூரியிலிருந்து 32 கோடி ரூபாய் கிடைத்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது என்று தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “அனைந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக தலைமையிலான கூட்டணி மகத்தான் வெற்றி பெறும். அ.தி.மு.க வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில் மகத்தான எழுச்சியை க்கான முடிகிறது. எனவே நாற்பதும் நமதே, நாடும் நமதே என்பதைஅ போல் அனைத்து தொகுதிகளையும் நாங்கள் கைப்பற்றுவோம்.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் புதுமையானது எதுவும் இல்லை அரைத்த மாவை அரைத்துள்ளார்கள். நீட் தேர்வுக்கு விலக்கு அந்தந்த மாநிலம் முடிவெடுத்துக் கொள்ளலாம் என கூறியுள்ளார்கள். நீட் தேர்வை கொள்கை முடிவாக எடுத்து அறிவித்தது தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி தான். மக்கள் மறந்துவிட மாட்டார்கள். நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அலிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகிறோம். அதிலிருந்து நிச்சயம் விலக்கு அளிக்கப்படும்.

முன்னாள் அமைச்சர் துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திய போது 10 லட்சம் சிக்கியது. அப்போது துரைமுருகன் வந்தார்கள், எடுத்துக்கொண்டார்கள் என்று பதற்றமின்றி கூறினார். தற்போது அவருக்கு சொந்தமான குடோன்கள், கல்லூரியிலிருந்து 32 கோடி ரூபாய் கிடைத்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. 

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் கொள்ளையடித்த 1 லட்சத்து 86 ஆயிரம் கோடி என்ன ஆனது எங்குள்ளது என்று தெரியவில்லை. இந்த ரைடில் சிக்கும் அனைத்தும் அதன் வெளிபாடு தான். தி.மு.க முன்னால் அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் நிற்கும் இடத்தில் சோதனை நடத்தினால் பல்லாயிரம் கோடி ரூபாய் சிக்கும். பணம் இருக்கும் இடத்தின் தகவல் வந்து கொண்டிருக்கிறது. எனவே பணம் வைத்த இடத்தை மாற்றி வருகிறார்கள். தேர்தல் பணியை காட்டிலும் இந்த பனி தான் அதிகம் நடந்து வருகிறது.

1 லட்ச்த்து 86 ஆயிரம் கோடி ரூபாய் வைத்து தமிழகத்தின் கடனை அடைக்கலாம். இந்த பணம் எப்போது அரசாங்க கஜனாவிற்கு வருகிறதோ அது தான் திருநாள். இந்த கருப்பு பணத்தை வைத்து வாக்காளர்களை விலைக்கு வாங்க வருவாய் துறை விடாது. விடாது கருப்பு போல் விடாது துரத்தும். நாளை இங்கு வரும் இந்திய தேர்தல் ஆணையரிடம் இதுபற்றி புகார் அளிக்கப்படும்.

அ.தி.மு.க கூட்டணி வேட்பாளர் அங்கு வெற்றி பெறும் சூழல் நிலவுவதால் அதை பறிக்க வேண்டும் என்று தி.மு.க வினர் அங்கு பணம் செலவு செய்துள்ளனர். எனவே தவறு செய்தவரை தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து தகுதிநீக்கம் செய்ய வேண்டுமே தவிர ஒட்டுமொத்தமாக தேர்தலை நிறுத்தக்கூடாது” என்று தெரிவித்தார்.     

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.