ETV Bharat / state

பொன்பரப்பி கலவரத்திற்கு யார் காரணம் -மே 17 இயக்கம் கள ஆய்வு! - ariyallur

சென்னை: அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் நடைபெற்ற கலவரத்துக்கு யார் காரணம் என்பதை கண்டறிய  மே 17 இயக்கத்தினர் கள ஆய்வு செய்துள்ளனர்.

MAY 17 ORG INVESTIGATING PONPARAPPI ISSUE
author img

By

Published : Apr 21, 2019, 3:21 PM IST

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ‘பொன்பரப்பியில் திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறிப்பாக பானை சின்னம் எந்த வீட்டில் வரையப்பட்டுள்ளதோ அந்த வீடுகள் கடுமையாக தாக்கப்பட்டுள்ளன. அங்கு தண்ணீர் விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பட்டியலின மக்கள் பானை சின்னத்திற்கு வாக்களிக்க உள்ளார்கள் என்பதால் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

திருமாவளவனுக்கு வாக்களிக்கக் கூடாது என்பதற்காக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதற்கு காரணம் இந்துத்துவ அமைப்பினர். பொன்பரப்பியில் 300, 400 பேர் வாக்களிக்க முடியவில்லை. பொன்பரப்பி பிரச்னையில் தேர்தல் ஆணையம் முறையற்று இயங்கியுள்ளது.

இதற்கு காரணமான இந்து முன்னணி ஒன்றியச் செயலாளர் ராஜசேகர், தலைவர் ராமகோபால் ஐயர் மீது பட்டியலின வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.

இது தொடர்பாக வருகின்ற 23 ஆம் தேதி பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம்' என்று திருமுருகன் காந்தி தெரிவித்தார்.

பொன்பரப்பியில் நடைபெற்ற கலவரத்துக்கு யார் காரணம் என்பதை கண்டறிய  மே 17 இயக்கத்தினர் கள ஆய்வு செய்துள்ளனர்.

இது குறித்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, " பொன்பரப்பியில் திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறிப்பாக பானை சின்னம் எந்த வீட்டில் வரையப்பட்டுள்ளதோ அந்த வீடுகள் கடுமையாக தாக்கப்பட்டுள்ளது. அங்கு தண்ணீர் விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

பட்டியலின மக்கள் பானை சின்னத்திற்கு வாக்களிக்க உள்ளார்கள் என்பதால் தாக்குதல் நடத்தியுள்ளனர். 90 வயதை தாண்டிய மூதாட்டியை கட்டிலில் இருந்து தூக்கி போட்டுள்ளனர்.

தோழர் திருமாவளவனுக்கு வாக்களிக்க கூடாது என்பதற்காக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதற்கு காரணம் இந்துத்துவ அமைப்பினர். மக்களின் வாக்குகள் பதிவாகக் கூடாது என்பதற்காக அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையம் இதை அனுமதிக்கிறது என்றால் இந்துத்துவ அமைப்புக்கு துணை போகிறார்கள் என்பதே அர்த்தம். தேர்தல் ஆணையத்தை கலைத்துவிட்டு பா.ஜ.க. வில் சேர்ந்துவிடலாம். மக்கள் வாக்குகளை பதிவு செய்ய முடியவில்லை என்றால் தேர்தல் ஆணையம் எதற்கு.

பொன்பரப்பியில் 300, 400 பேர் வாக்கு அளிக்க முடியவில்லை. தேர்தல் ஆணையம் இன்றுவரை அதைப்பற்றி பேசாதது ஏன். ஆளுங்கட்சிகு சார்பாக இருப்பீர்கள் என்றால் அந்த கட்சிகளின் உறுப்பினர்களாக சேந்து கொள்ளுங்கள்.

சின்னம் ஒதுக்கப்படுவதிலிருந்து தேர்தல் முடியும்வரை தோழர் திருமாவளனுக்கு பல நெருக்கடிகளை தேர்தல் ஆணையம் கொடுத்துள்ளது. தேர்தல் ஆணையர் சாதிய வன்மத்தோடு இயங்குகிறாரே.

பொன்பரப்பி பிரச்னையில் தேர்தல் ஆணையம் முறையற்று இயங்கியுள்ளது.
இதற்கு காரணமான இந்து முன்னணி ஒன்றியச் செயலாளர் ராஜசேகர், தலைவர் ராமகோபால் ஐயர் மீது பட்டியலின் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.

தாக்குதலில் ஏற்பட்ட சேதங்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும். வீடுகள் மறுசீரமைப்பு செய்ய வேண்டும்.
வாக்குச் சாவடிகளை எங்கள் பகுதியில் அமைக்க வேண்டும் என்று கோரிக்கையை மக்கள் வைக்கின்றனர். இது தொடர்பாக வருகின்ற 23 ஆம் தேதி பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம்.

இதுவரை இந்து முன்னணி செய்த ஒரே ஒரு நல்ல காரியத்தை சொல்லச் சொல்லுங்கள். சாதிய அமைப்புகளை ஏவியது இந்து முன்னணி அமைப்பினர்தான்.

60 ஆண்டுகளில் இது மாதிரியான தாக்குதல் நடைபெறவில்லை. சாதிய அமைப்புகளை இயக்குவது அதிகாரத்தில் இருக்கும் இந்துத்துவ அமைப்பினர் தான்.

கன்னியாகுமரியில் ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. அவர்கள் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு எதிராக வாக்களிப்பார்கள் என்பதாலே இவ்வாறு  செய்துள்ளனர்.

முந்தைய தேர்தல்களில் எவ்வளவு வன்முறை நடந்தது தற்போது எவ்வளவு குறைந்துள்ளது என்ற தகவலை ரஜினி  கொடுத்தால் நன்றாக இருக்கும்" என்று தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.