மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை குறித்து பல்வேறு கேள்விகளை நடிகர் சூர்யா எழுப்பினார். மேலும் பெற்றோர்களும் ஆசிரியர்களும் மாணவர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு புதிய கல்விக்கொள்கை குறித்து ஆராய வேண்டும் எனவும் கூறினார். சூர்யாவின் இந்த கருத்திற்கு பாஜக கட்சியினர் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், சூர்யாவுக்கு மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், சூர்யா பல வருடங்களாக ஏழை மாணவர்களுக்கு உதவி செய்து வருவதால், கல்வி குறித்துப் பேசுவதற்கான உரிமை அவருக்கு இருக்கிறதென்றும், அவர் கூறும் பல கருத்துகளில் தான் உடன்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் சூர்யாவை எதிர்க்கும் ஆளுங்கட்சிகளின் ஆதிக்கப்போக்கைக் கண்டிப்பதாகவும் கமல்ஹாசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.