ETV Bharat / state

நிலத்தடி நீர் விவகாரம்: ஸ்டாலின்-அமைச்சர் வேலுமணி விவாதம்

சென்னை: தமிழகம் முழுவதும் குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது எனவும், 20 மாவட்டங்களில் நிலத்தடி நீர் குறைந்து விட்டதாக ஆய்வறிக்கை கூறுகிறது என்று சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கூறிய குற்றச்சாட்டுக்கு அமைச்சர் வேலுமணி பதிலளித்தார்.

சட்டமன்றத்தில் பேசிய ஸ்டாலின்
author img

By

Published : Feb 13, 2019, 8:02 PM IST

M.K.Stalin
சட்டமன்றத்தில் பேசிய ஸ்டாலின்
தமிழகம் முழுவதும் குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது, ஏரிகளில் தண்ணீர் இல்லை. 33 மாவட்டங்களில் 20 மாவட்டங்களில் நிலத்தடி நீர் குறைந்து விட்டதாக ஆய்வறிக்கை கூறுகிறது என்று சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
undefined

மேலும், தடையின்றி தண்ணீர் வழங்க தமிழக அரசு ரூ.157 கோடி ஒதுக்கியது, யானை பசிக்கு சோளப்பொரி போல உள்ளது. கடல் நீரை குடிநீராக்கும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. போரூர், தூத்துக்குடி, விழுப்புரம் மற்றும் கடலூர் என கடல் நீரை குடிநீராக்கும் திட்டங்கள் 9,692 கோடி ரூபாய் திட்டங்கள் என்ன நிலையில் உள்ளது என அரசு வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கோருவதாக அவர் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் வேலுமணி, "ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனியாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்து குடிநீர் தட்டுப்பாடுகளை களைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

142 ஆண்டுகளாக இல்லாத வறட்சியையும் சமாளித்துள்ளோம். கடந்த ஐந்து ஆண்டுகளில், 2016-17-ல் 19 வரை ஒரு லட்சத்து 23 ஆயிரம் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னை 2,464 கோடி ஒதுக்கீடு செய்து, பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

மே- ஜுன் மாதங்களில் மோட்டார் கிணறுகள், ஆழ்துளை கிணறுகள் ஆழப்படுத்துதல் என குடிநீர் பிரச்னையை சமாளிக்க 158 கோடி ரூபாய் ஒதுக்கி பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட மாநகராட்சிகளில் குடிநீர் திட்டங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளது. மதுரைக்கு நிரந்தரமான குடிநீர் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு டெண்டர் விடப்பட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது.

சென்னையில் குடிநீர் பணிகளுக்காக, மக்கள் பாதிக்கப்படாத வகையில், புதிய முயற்சிகளுக்காக குன்றத்தூர் அருகே 25 குவாரி தண்ணீர் கொண்டுவரப்பட்ட உள்ளது. போரூர் ஏரியில் இருந்து வடிகட்டிய தண்ணீர் கொண்டுவரப்பட உள்ளது.

மேட்டூரிலிருந்து வீராணத்திற்கு நீர் நிரப்ப நடவடிக்கைகள், நெய்வேலியிலிருந்து, தாமரைபாடி பகுதிகளில் இருந்து தண்ணீர் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

undefined

எட்டு கோடியில் நிலத்தடி நீர் எடுக்க ஏற்பாடு, கிருஷ்ணா நதி நீரை பெற முதலமைச்சர் கடிதம் எழுதி நடவடிக்கைகள், அனைத்து மாவட்டங்களிலும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மூலம் கண்காணிக்கப்பட்டு குடிநீர் பிரச்னைகள் தீர்க்கப்பட்டு வருகிறது.

எனவே, சென்னையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டால் சிறப்பாக சமாளிக்க முடியும்" என கவன ஈர்ப்பு தீர்மான குறித்த பதில் அளித்தார்.

மேலும், கூட்டுக்குடிநீர் குறித்து வேலுமணி பேசுகையில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம், சேலம், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் புதிய கூட்டுக்குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது என தெரிவித்தார்

கவன ஈர்ப்பு தீர்மானம்

ஸ்டாலின்;

 குடிநீர் பஞ்சம் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. சென்னையில் உள்ள ஏரிகளில் நீர் இருப்புகள் குறைந்துள்ளது. 33 மாவட்டங்களில் 20 மாவட்டங்களில் நிலத்தடி நீர் படு மோசமாக உள்ளது..

தடையின்றி தண்ணீர் வழங்க 157 கோடி ஒதுக்கியது, யானை பசிக்கு சோளப்பொரி போல உள்ளது. 
5 கடல் நீரை குடிநீராக்கும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. போரூர், தூத்துக்குடி, விழுப்புரம் மற்றும் கடலூர் என கடல் நீர் குடிநீராக்கும் திட்டங்கள் 9692 கோடி ரூபாய் திட்டங்கள் என்ன நிலையில் உள்ளது என அரசு வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கோருகிறேன்..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.