ETV Bharat / state

அல்சரால் புற்றுநோய்! அதனை தடுக்க இதோ எளியவழி... - Foodnews

சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக்கொள்ளவில்லை என்றால், சாதாரண அல்சர்தான் வரும் என்று அனைவரும் நினைக்கிறார்கள். ஆனால், இந்த அல்சர் தொடர்ந்தால் புற்றுநோய் வரும் என்று நம்மில் எத்தனைப் பேருக்குத் தெரியும். அதைத் தவிர்க்க நாம் என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.

Ulcer
author img

By

Published : Mar 17, 2019, 9:51 AM IST

இன்றைய கால மனிதர்கள் அனைவரும் இயந்திர முறையில் படு பிசியாக ஓடிக்கொண்டிருக்கிறார்கள். வேலைக்கு சரியான நேரத்திற்குச் செல்லவேண்டும். குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும், வீட்டில் வேலை செய்ய வேண்டும் போன்ற பல காரணங்களால் அனைவரும் பயங்கர பிசி...பிசி...பிசி... இப்படி ஒவ்வொன்றிற்காகவும் ஓடிக்கொண்டிருக்கும் மக்கள் தங்களின் உடல்நலனில் அக்கறை கொண்டுள்ளார்களா? என்ற கேள்விக்கு பலரிடம் பதிலே இல்லை என்று கூறலாம்.

காலையில் வேலைக்கு செல்ல வேண்டும், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்பதால், அவசரம், அவசரமாக கிளம்பும் பெரும்பாலோரின் காலை உணவு என்னவென்றால், ஒரு குவளை டீ, காபி, பால்தான். இல்லையென்றால், காலை உணவே எடுத்துக்கொள்வதில்லை. இவர்கள் வேலையில் காட்டும் அக்கறையை, தங்களது உடல்நலன் மீது செலுத்துவதில்லை.

இப்படி காலை உணவை அனைவரும் எடுத்துக்கொள்ளாமல் இருந்தால், நாளடைவில் அல்சர் தான் வரும். இந்த அல்சர் தொடர்ந்தால், புற்றுநோய் வர வாய்ப்புள்ளது என்று நம்மில் எத்தனைப் பேருக்குத் தெரியும்.

அல்சர் என்றால் என்ன?

சரியாக உணவு எடுத்துக் கொள்ளாமல் இருத்தல்.
நமது இரைப்பையில் ஹெச்.சி.எல். என்ற சுரப்பியானது, நாம் உணவு சரியான நேரத்திற்கு உட்கொள்ளாத நிலையில், அதிக அளவு சுரக்கும். இவை பசியைத் தூண்டக்கூடிய அமிலமாகும்.

வெறும் வயிற்றில், அதாவது உணவு உட்கொள்ளாமல் பசி ஏற்பட்டு இருந்தால், இந்த ஹெச்சிஎல் அமிலம் சுரந்து இரைப்பை, குடலில் அரிமானத்தை (அரிப்பை) ஏற்படுத்தும்.

இவ்வாறு நாம் தினமும் உணவை சரியான நேரத்திற்கு எடுத்துக்கொள்ளவில்லை என்றால், இந்த அமிலத்தின் செயல் நாளுக்கு நாள் அதிகரிக்கும்போது அல்சர் ஏற்படும்.

பின்னர், இந்த அல்சர் தொடர்ந்தால் குடல் (அ) இரைப்பையில் புண் ஏற்பட்டு ரத்தம் வெளியேறும். பின்னர் கேன்சர் உண்டாகும் ஆபத்துள்ளது.

அல்சரின் அறிகுறிகள்:

முதலில் வாயில் துர்நாற்றம் வீசும். பின்பு வாய்ப்புண் ஏற்படும். அடிக்கடி வயிறு வலி ஏற்படும். இவை அடிக்கடி தொடர்ந்தால், உணவு உட்கொள்ள முடியாமல் வாந்தி ஏற்படும்.

அல்சர் உண்டாவதற்கான காரணங்கள்:

1. வெறும் வயிற்றில் அதிக ஸ்ட்ராங்கான டீ, காபி உட்கொள்ளுதல்.

2. ஆல்கஹால், காரம், புளிப்பு போன்வற்றை அதிகமாக உணவில் சேர்த்தல்.

3.காலை உணவு என்ற ஒன்றை எடுத்துக்கொள்ளாமலே இருத்தல்.

அல்சர் என்பது நாம் உணவு எடுத்துக்கொள்ளாததால் வருவதே என்று சாதாரணமாக நினைக்கிறோம். ஆனால், அல்சரில் நிறைய வகை இருக்கு.

அல்சரின் வகைகள்:

1. கேஸ்ட்ரிக் அல்சர் (Gastric Ulcer)

2. பிளீடிங் அல்சர் (Bleeding Ulcer)

3. டியோடெனல் அல்சர் (Duodenal Ulcer)

4. பெப்டிக் அல்சர் (Peptic Ulcer)

அல்சரில் இத்தனை வகையா? என்று பயப்பட வேண்டாம். இது வராமல் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம்.

அல்சர் வராமல் இருக்க செய்ய வேண்டியவை:

1. தினமும் காலை உணவை தவிரக்கக் கூடாது. உணவானது எளிதில் செரிக்கக் கூடியதாகவும், சத்துமிக்கதாகவும் இருக்க வேண்டும்.

2. அலுவலகத்துக்கு நேரம் ஆகிவிட்டதென்றால், வேகவைத்த முட்டை ஒன்று (அ) ஒரு டம்ளர் பால், பிரட், இரண்டு பேரீச்சம்பழம் சாப்பிடலாம்.

அல்சரால் பாதிக்கப்பட்டுவர்கள் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டியவை

1. புரதம் நிறைந்த உணவுகளை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

2.பால், முட்டை, பயறுவகைகள் முதலிய உணவுகளை உணவில் அதிகம் சேர்க்கவும்.

3. நீரானது உடலுக்கு மிகவும் அவசியம். அதனால், ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறை ஒரு டம்ளர் நீரை அருந்த வேண்டும். மேலும், நீராகாரம், பழச்சாறு அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

காயம் பட்ட இடத்தில் எப்படி மருந்து போடுகிறாமோ, அதைப்போலத்தான் அல்சரால் பாதிக்கப்பட்டவர்களின் முதல் மருந்து நீர், பால் போன்ற நீராகாரம்.

உட்கொள்ள வேண்டியவை:

பால், வெண்ணெய், நெய், பாலாடைக்கட்டி, பால் சம்பந்தப்பட்ட பொருட்கள், வேகவைத்த முட்டை, ஆவியில் வேகவைத்த மீன், அரிசி (அவல், பொறி), வேகவைத்த சிறுதானியங்கள், பயறுவகைகள், கீரைகள், காய்கறிகள், பழங்கள் (வாழைப்பழம், பலாப்பழம், மாதுளை, ஆப்பிள்) ஆகியவற்றை உட்கொள்ள வேண்டும்.

தவிர்க்க வேண்டியவை

ஆல்கஹால், வெறும் வயிற்றில் ஸ்ட்ராங் டீ, காபி ஆகியவற்றைத் தவிர்த்தல்.

எண்ணெய் பதார்த்தங்கள் நிறைந்த கிரேவீஸ், ஊறுகாய், மிகவும் காரமான-புளிப்புத்தன்மை வாய்ந்த உணவுகள், கேக், அதிக இனிப்புகள் (அல்வா, பர்ஃவி), வெங்காயம், முள்ளங்கி, தக்காளி ஆகியவற்றைத் தவிர்த்தல் நல்லது.

Intro:Body:

samayal

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.