ETV Bharat / state

1000 கிமீ தூரம் வரை செயற்கைக்கோளை தடுத்து தாக்க முடியும் - ராணுவ தளவாட உற்பத்தி மற்றும் பாதுகாப்பு நிறுவனத்தின் இயக்குநர் பாலமுருகன்

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஆவடியில் உள்ள ராணுவ தளவாட உற்பத்தி மற்றும் பாதுகாப்பு நிறுவனத்தின் இயக்குநர் பாலமுருகன் கலந்துகொண்டு பேசுகையில் 1000 கிமீ தூரம் வரை செயற்கைக்கோளை தடுத்து தாக்கும் தொழில்நுட்பம் தான் ’மிஷன் சக்தி’ என்றார்.

ராணுவ தளவாட உற்பத்தி மற்றும் பாதுகாப்பு நிறுவனத்தின் இயக்குநர் பாலமுருகன்
author img

By

Published : Apr 7, 2019, 8:56 PM IST

ராணுவத் தளவாட உற்பத்தி மற்றும் பாதுகாப்பு நிறுவனத்தின் இயக்குநர் பாலமுருகன் செய்தியாளர்களிடம் பேசுகையில், கிண்டி பொறியியல் கல்லூரியில் 1984ஆம் ஆண்டு படித்தேன். அப்பொழுது பொறியியல் படிப்பில் ஐந்து பிரிவுகள்தான் இருந்தன. தற்பொழுது பல்வேறு பாடப் பிரிவுகளும், அதிக அளவில் பொறியியல் கல்லூரிகளும் உருவாகியுள்ளன.

ராணுவ தளவாட உற்பத்தி மற்றும் பாதுகாப்பு நிறுவனத்தின் இயக்குநர் பாலமுருகன்

பொறியியல் படிப்பில் வேலை வாய்ப்புகள் குறைவாக உள்ளதாக கூறுகின்றனர். ஆனால் அவ்வாறு இல்லை. வேலை தேடுபவர்களின் அணுகுமுறைகள் நன்றாக அமைந்திருந்தால் எளிதாக வேலை கிடைக்கும். தற்பொழுது மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் 400 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம் உட்பட மத்திய அரசின் பணிகளுக்கு கேட் தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையிலேயே தரவரிசைப் பட்டியல் தயார் செய்து பணிக்கு ஆட்களைத் தேர்வு செய்கின்றனர். தமிழக மாணவர்கள் இதற்கு தங்களைத் தயார் செய்து கொண்டால் எளிதாக வேலை வாய்ப்பினை பெற முடியும்.

மிஷன் சக்தி திட்டத்தில் ஏ சாட் மூலம் தாக்குதல் நடத்தும் பொழுது விண்வெளியில் எந்த குப்பைகளும் சேராத வகையில் திட்டமிட்டுத்தான் நடத்தப்பட்டது. இந்த தாக்குதல் பூமியிலிருந்து 250 கிலோமீட்டர் தொலைவில் நடத்தப்பட்டது. அந்த துகள்கள் அனைத்தும் 45 நாட்களில் காணாமல் சென்றுவிடும். ஆனால் நாசா ஏன் இது போன்ற குற்றச்சாட்டுகளைக் கூறுகிறது என்பது தெரியவில்லை.

ஏ ஷாட் தொழில்நுட்பம் முழுவதும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டதுதான். இஸ்ரோ கடந்த ஜனவரி மாதம் ஒரு செயற்கைக்கோளை ஏவியது. அதனைக் கடந்த மார்ச் மாதம் 27ஆம் தேதி மத்திய பாதுகாப்புத் துறை தயாரித்த ஏ ஷாட் செயற்கைக்கோளைப் பயன்படுத்தி அழித்தனர். மிஷின் சக்தி மூலம் ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள செயற்கை கோளையும் தடுத்து நிறுத்தி தாக்கி அழிக்க முடியும். தற்பொழுது 250 கிலோமீட்டர் தூரத்தில் சோதனைக்காக நடத்தப்பட்டுள்ளது. மிஷன் சக்தி தொழில்நுட்பம் மூலம் பூமியிலிருந்து 1000 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள எதிரி நாட்டின் செயற்கைக்கோளினை தடுத்து நிறுத்தி தாக்கி அழிக்கமுடியும்.

ஆவடியில் உள்ள ராணுவத் தளவாடங்கள் உற்பத்திகள் மையத்தில் 'அர்ஜுன் டேங்க் மார்க் எம்பிடி 1' ராணுவத்திற்குத் தயார் நிலையில் உள்ளது. அதேபோல் ராணுவ தளவாட வாகனங்கள் ஆளில்லாமல் சென்று தாக்கும் வகையிலும் தயார் செய்து வருகிறோம் எனத் தெரிவித்தார்.

Intro:மிஷின் சக்தி மூலம் ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை
செயற்கைக்கோளை தடுத்து தாக்க முடியும்
டி ஆர் டி ஓ இயக்குனர் பாலமுருகன் தகவல்

Body:சென்னை, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆவடியில் உள்ள ராணுவ தளவாட உற்பத்தி மற்றும் பாதுகாப்பு நிறுவனத்தின் இயக்குனர் பாலமுருகன் கலந்துகொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கிண்டி பொறியியல் கல்லூரியில் 1984 ஆம் ஆண்டு படித்தேன். அப்பொழுது பொறியியல் படிப்பில் ஐந்து பிரிவுகள் தான் இருந்தன. தற்பொழுது பல்வேறு பாடப் பிரிவுகளும், அதிக அளவில் பொறியியல் கல்லூரிகள் உருவாகியுள்ளன.
பொறியியல் படிப்பில் வேலை வாய்ப்புகள் குறைவாக உள்ளதாக கூறுகின்றனர். ஆனால் அவ்வாறு இல்லை. வேலை தேடுபவர்களின் அணுகுமுறைகள் நன்றாக அமைந்திருந்தால் எளிதாக வேலை கிடைக்கும். தற்பொழுது மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் 400 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது.
பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம் உட்பட மத்திய அரசின் பணிகளுக்கு கேட் தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையிலேயே தரவரிசைப் பட்டியல் தயார் செய்து பணிக்கு ஆட்களை தேர்வு செய்கின்றனர். தமிழக மாணவர்கள் இதற்கு தங்களை தயார் செய்து கொண்டால் எளிதாக வேலை வாய்ப்பினை பெற முடியும்.
அதேபோல் பல்வேறு வேலை வாய்ப்புகளுக்கும் மாணவர்கள் தங்களை தயார் செய்து கொள்ள வேண்டும். அவ்வாறு அவர்கள் தங்களைத் தயார் செய்து கொள்கிறார்களா? என்பது தனக்கு சந்தேகமாக உள்ளது.
மத்திய அரசின் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்தில் கேட் தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்கின்றனர். எனவே மாணவர்கள் தங்களை அதற்கு தயார் செய்துகொண்டு தேர்வு எழுத வேண்டும்.
மத்திய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை உள்ளிட்டவற்றிற்கு நடைபெறும் தேர்வில் தமிழக மாணவர்கள் அதிக அளவில் மதிப்பெண் பெறுவதில்லை. எழுத்து தேர்வில் 85 சதவீத மதிப்பெண்களும், நேர்முகத் தேர்விற்கு 15 சதவீதம் மதிப்பெண்களும் அளிக்கப்படுகிறது. மாணவர்கள் எழுத்து தேர்வினை நன்றாக எழுதினால்தான் தேர்ச்சி பெற முடியும். இது குறித்த விழிப்புணர்வு அவர்களிடம் குறைவாக இருக்கிறதா? அல்லது அவர்கள் கடினமாக உழைக்கவில்லையா ? என்பது தெரியவில்லை.தமிழக மாணவர்கள் குறைந்த அளவிலேயே தேர்ச்சி பெறுகின்றனர்.
மிஷன் சக்தி திட்டத்தில் ஏ சாட் மூலம் தாக்குதல் நடத்தும் பொழுது விண்வெளியில் எந்த குப்பைகளும் சேராத வகையில் திட்டமிட்டு தான் நடத்தப்பட்டது. இந்த தாக்குதல் பூமியிலிருந்து 250 கிலோமீட்டர் தொலைவில் நடத்தப்பட்டது. அந்த துகள்கள் அனைத்தும் 45 நாட்களில் காணாமல் சென்றுவிடும். இதுபோன்ற திட்டமிட்டுதான் தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால் நாசா ஏன் இது போன்ற குற்றச்சாட்டுகளை கூறுகிறது என்பது தெரியவில்லை.
ஏ ஷாட் தொழில்நுட்பம் முழுவதும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டதுதான். இஸ்ரோ கடந்த ஜனவரி மாதம் ஒரு செயற்கைக்கோளை ஏவியது. அதனை கடந்த மார்ச் மாதம் 27 ம் தேதி மத்திய பாதுகாப்பு துறை தயாரித்த ஏ ஷாட் செயற்கைகோளை பயன்படுத்தி அழித்தனர். மிஷின் சக்தி மூலம் ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள செயற்கை கோளையும் தடுத்து நிறுத்தி தாக்கி அழிக்க முடியும். தற்பொழுது 250 கிலோமீட்டர் தூரத்தில் சோதனைக்காக நடத்தப்பட்டுள்ளது.
மிஷன் சக்தி தொழில்நுட்பம் மூலம் பூமியில் இருந்து 1000 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள எதிரி நாட்டின் செயற்கைக்கோளினை தடுத்து நிறுத்தி தாக்கி அழிக்கமுடியும்.

அதேபோல் எத்தனை செயற்கைக்கோள் இருந்தாலும் அவற்றை அழிக்க முடியும்.
அதேபோல் பல்வேறு தொழில் நுட்பங்களுடன் சேட்டிலைட் அழிக்க கண்டுபிடிப்புகள் உள்ளன.
ஆவடியில் உள்ள ராணுவ தளவாடங்கள் உற்பத்திகள் மையத்தில் அர்ஜுன் டேங்க் மார்க் எம்பிடி 1 ராணுவத்திற்கு தயார் நிலையில் உள்ளது. சில மாதங்களில் அதற்கு அனுமதி கிடைக்கும். பாதுகாப்பு துறைக்கு ஆளில்லா விமானங்களை இயக்குவதற்கும் தயார் செய்து அளித்து வருகிறோம். அதேபோல் ராணுவ தளவாட வாகனங்கள் ஆளில்லாமல் சென்று தாக்கும் வகையிலும் தயார் செய்து வருகிறோம் என தெரிவித்தார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.