ETV Bharat / state

தேசிய கல்விக்கொள்கை - நான்கு மண்டலங்களில் கருத்துக் கேட்பு!

சென்னை: புதிய கல்விக்கொள்கை குறித்து நான்கு மண்டலங்களில் பொதுமக்கள், துறை சார்ந்த நிபுணர்களின் கருத்துகள் கேட்கப்படவுள்ளன.

நான்கு மண்டலங்களில் கருத்துக் கேட்பு
author img

By

Published : Jul 17, 2019, 1:00 PM IST

Updated : Jul 17, 2019, 2:11 PM IST

கடந்த மே மாதம் இறுதியில் புதிய தேசிய கல்விக் கொள்கைக்கான வரைவு சமர்ப்பிக்கப்பட்டது. சமர்ப்பிக்கப்பட்ட நாள் முதல் பல்வேறு எதிர்ப்புகளை தேசிய கல்விக் கொள்கையின் வரைவு பெற்றுவருகிறது. சமீபத்தில் நடிகர் சூர்யாவும் தனது அதிருப்தியைப் பதிவு செய்தார்.

இந்நிலையில், புதிய தேசிய கல்விக் கொள்கை வரைவு குறித்து கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், சமூக ஆர்வலர்களிடம் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் கருத்துகளைக் கேட்க முடிவு செய்துள்ளது. அதன்படி கோவை மண்டலத்தில் இன்றும் (17.7.2019), திருச்சி மண்டலத்தில் ஜூலை 19ஆம் தேதியும், மதுரை மண்டலத்தில் ஜூலை 22ஆம் தேதியும் சென்னை மண்டலத்தில் 24ஆம் தேதியும் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெறவுள்ளது.

Intro:
தேசிய வரைவு கல்விக் கொள்கை
4 மண்டலங்களில் கருத்துக் கேட்பு Body:

சென்னை,
புதியக் கல்விக்கொள்கை குறித்து 4 மண்டலங்களில் கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், சமூக ஆர்வலர்களிடம் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் கருத்தினை கேட்கிறது.

இது குறித்து மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குனர் பழனிசாமி கூறியதாவது, மத்திய அரசின் வரைவு தேசிய கல்விக்கொள்கை 2019யினை வெளியிட்டு முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள் , ஆசிரியர்கள், வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், கல்வி வளர்ச்சிக்கு துணை புரியும் தொண்டு நிறுவனங்கள் போன்ற கல்விசாந்த ஆர்வலர்களிடம் கருத்துகளை பெற்று மத்திய அரசிற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், நீலகிரி, நாமக்கல், கரூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய 9 மாவட்டங்களில் உள்ளவர்களுக்கு இன்று(17.7.2019)கோயம்புத்தூரில் கருத்துக் கேட்கப்படுகிறது.
திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், திருவாரூர்,நாகப்பட்டிணம் ஆகிய 7 மாவட்டங்களுக்கு 19.7.2019 அன்று திருச்சியில் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்படுகிறது.

மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துகுடி ஆகிய 9 மாவட்டங்களுக்கு 23.7.2019 அன்று மதுரையில் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்படுகிறது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், கடலூர் ஆகிய 7 மாவட்டங்களுக்கு 24.7.2019 அன்று சென்னையில் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்படுகிறது.
இந்த கருத்தரங்கில் ஆசிரியர்களும், பெற்றோர்களும், மாணவர்களும் தங்களின் கருத்துகளை தெரிவிக்கலாம் என கூறினார். Conclusion:
Last Updated : Jul 17, 2019, 2:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.