ETV Bharat / state

திராவிட பேரினத்தின் தமிழ்ப் பேராசானுக்கு பிறந்தநாள்! - #hbdkalaignar96

ஜூன் மாதம் வந்துவிட்டாலே திமுகவினரை ஒருவித உற்சாகம் தொற்றிக்கொள்ளும். காரணம் அக்கட்சியின் 50 ஆண்டு கால தலைவரும், மறைந்த முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் கருணாநிதி பிறந்த மாதம் என்பதால்தான்.

kalaignar
author img

By

Published : Jun 3, 2019, 10:27 AM IST

Updated : Jun 3, 2019, 12:19 PM IST

ஜூன் 3ஆம் தேதியான அவரின் பிறந்தநாளுக்கு ஒரு வாரத்துக்கு முன்பாகவே பேச்சுப் போட்டிகள், கட்டுரைப் போட்டிகள், விளையாட்டுப் போட்டிகள் என திமுக, அதன் சார்பு அமைப்புகள் பல்வேறு போட்டிகளை நடத்தி பரிசுகளை வழங்குவார்கள். அது மட்டுமல்லாமல், பொதுக்கூட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி அந்த மாதத்தையே உற்சாகத்துடன் கடத்திடுவது வழக்கம்.

நிகரில்லா புன்சிரிப்புடன்...
நிகரில்லா புன்சிரிப்புடன்...

இத்தனை ஆண்டுகள் இப்படி உற்சாகமாக நகர்ந்துகொண்டிருந்த திமுகவினரின் கொண்டாட்ட மனநிலை இந்தாண்டு சற்று தொய்வடைந்துள்ளது. இருப்பினும், அவரின் சாதனைகளையும், அர்ப்பணிப்புகளையும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கடத்திட வேண்டும் என்பதால் தங்களின் ஆருயிர் தலைவர் இல்லாத முதல் பிறந்தநாளையும் அதே உற்சாகத்துடன் கொண்டாடியே தீர வேண்டும் என தீர்க்கமாக இருக்கின்றனர்.

ஒரு அரசியல் கட்சித் தலைவருக்கும் அவரின் தொண்டர்களுக்கும் இத்தனை நெருக்கம் எப்படி சாத்தியமாகிறது என மாற்றுக் கட்சியினரும் வியக்கும் அளவிற்கான பந்த பாசம்தான் அவர்களுக்குள் இருக்கும் பாசப்பிணைப்பு! ஏனெனில், தொண்டர்களை மதிக்கத் தெரிந்த தலைவர் அவர். அதனால்தான் இதனை அவராலும், அவரின் உடன்பிறப்புகளாலும் சாத்தியமாக்க முடிகிறது.

யோசனையில் கருணாநிதி
யோசனையில் கருணாநிதி

துரைமுருகன் ஒருமுறை மேடையில் பேசுகையில், ராசாமணி என்ற திமுக தொண்டருக்கும் கருணாநிதிக்கும் இடையே நிகழ்ந்த உரையாடலை அருகில் இருந்து பார்த்தவர் என்ற முறையில் மிக உருக்கமாகக் குறிப்பிடுவார். அது என்னவென்றால், தன் தலைவரை பார்க்க வேண்டும் என்ற ஆசையுடன் வந்த தொண்டர் ராசாமணியிடம் யார் மீதோ இருந்த கோபத்தை கலைஞர் காட்டிட, அழுது கொண்டே அங்கிருந்து ராசாமணி புறப்பட்டுச் செல்கிறார். அடுத்த சில நிமிடங்களிலேயே, ‘என்னய்யா துரை அவனை ரொம்ப திட்டிட்டேனா?’ என அருகிலிருந்த துரைமுருகனிடம் கேட்ட கலைஞர், ‘அவன் போயிருக்கல்லாம் மாட்டான். உடனே போய் கூட்டிட்டு வா’ என கூறியுள்ளார். உடனே ஆட்டோவிற்காக காத்திருந்த ராசாமணியை, ‘தலைவர் ஒன்ன கூப்பிடறாருய்யா’ என துரைமுருகன் அழைத்து வந்து கலைஞர் முன் நிறுத்தியுள்ளார்.

கருப்பு வெள்ளையில் கருணாநிதி!
கருப்பு வெள்ளையில் கருணாநிதி!

அப்போது கலைஞர், ‘ஏதோ கோவத்துல கத்திட்டேன்யா... என்னை மன்னிச்சுடு’ என ராசாமணியிடம் கூற, அவரோ ’அய்யய்யோ தலைவரே...’ என கலைஞர் முன் அழுது புரண்டுள்ளார். இது அறிவாலயத்தில் நடக்கும் அன்றாட காட்சிகள்தான் என்ற போதிலும், கருணாநிதிக்கும் அவரது தொண்டர்களுக்கும் உள்ள பந்தத்தை இந்த நிகழ்வின் மூலம் விவரித்திருப்பார் துரைமுருகன்.

மேல ஏறி வாரோம்...
மேல ஏறி வாரோம்...

‘தென்றலைத் தீண்டியதில்லை நான்... தீயைத் தாண்டியிருக்கிறேன்’ என பராசக்தி படத்தில் சிவாஜிக்காக அவர் எழுதிய வசனம் பின் நாட்களில் அவரின் வாழ்க்கையாக மாறியதுதான் இங்கு விந்தையாக அமைந்தது. சாலை விபத்து, நெஞ்சில் போற்றிய தலைவன் பேரறிஞர் அண்ணாவின் மரணம், ஆருயிர் நண்பன் எம்ஜிஆரின் பிரிவு, பகுத்தறிவை ஊட்டி வளர்த்த ஈரோட்டுச் சிங்கம் பெரியார் மறைவு, மிசா, ஆட்சி கலைப்பு, 13 வருட வனவாசம், ராஜீவ் படுகொலையால் சுமத்தப்பட்ட பழி, நான் பெற்றெடுத்த மூத்த பிள்ளை என கருணாநிதி விளித்த ‘முரசொலி’ அலுவலகம் எரிப்பு, வைகோ பிரிவு, நடு இரவில் கைது, 2ஜி குற்றச்சாட்டு, ஈழ விரோதி பட்டம், தேர்தல் தோல்வி என அத்தனையையும் கடந்து அவர் நதி போல் ஓடிக் கொண்டிருந்தததற்கும் அவரின் உடன்பிறப்புகள்தான் காரணம். அதனால்தான் அவர் எப்போதும் தன் தொண்டர்களை ‘என் உயிரினும் மேலான உடன்பிறப்புகள்’ என அடையாளப்படுத்தி வந்தார்.

மேடைப்பேச்சின்போது...
மேடைப்பேச்சின்போது...

ஆளாக்கிய அண்ணா மறைந்தபோது இவர் எழுதிய கவிதையின் மூலம் ஒரு அரசியல் கட்சி தலைவருக்கு இப்படி ஒரு தொண்டனா? என்கிற அளவுக்கு தன்னை ஒரு தலைசிறந்த தொண்டனாக நிலை நிறுத்திடவும் கருணாநிதி தவறவில்லை.

தலைவனை ஏந்தி நிற்கும் தொண்டர்கள்...
தலைவனை ஏந்தி நிற்கும் தொண்டர்கள்...

அண்ணாவிற்கு அவர் எழுதிய இரங்கற்பாவில், “மனிதரென்பார் - மாணிக்கமென்பார் மாநிலத்து அமைச்சரென்பார். அன்னையென்பார், அருள்மொழிக் காவலர் என்பார், அரசியல்வாதி என்பார் — அத்தனையும் தனித்தனியே சொல்வதற்கு நேரமற்றோர் - நெஞ்சத்து அன்பாலே அண்ணா என்ற ஒரு சொல்லால் அழைக்கட்டும் என்றே அவர் அன்னை பெயரும் தந்தாரோ?” என்ற வரிகளில் நிரம்பியிருக்கிறது அவரது கவித்திறன். தன் தலைவன் அண்ணா மீது தான் கொண்ட காதலை இப்படியாக வெளிப்படுத்தியிருப்பார் கலைஞர்!

90களில் மேடையில் கர்ஜிக்கும் கருணாநிதி...

இப்படி உணர்வுமிக்க பல்வேறு நிகழ்வுகளையும், பல வரிகளையும் இங்கு நம்மால் பட்டியலிட முடியும். அவரின் வாழ்வு அத்தனை நீளமானது, அத்தனை முழுமையானது. இதை பொது சமூகம் உணர்ந்திட வேண்டிய தேவை கட்டாயம் உள்ளது. ஏனென்றால், சாதிய படிநிலைகள் நிறைந்த இந்த சமூகத்தில் காலணி தைப்பவரின் மகனும் கலெக்டர் ஆக முடியும் என்கிற அளவுக்கு அவர் ஆற்றிய செயல்களும், கொண்டுவந்த நலத்திட்டங்களும் எவராலும் தொடக்கூட முடியாத எட்டா ஏணியாகும்.

மேடைப்பேச்சின்போது...
மேடைப்பேச்சின்போது...

இது ஒருபுறமிருக்க அவரிடமிருந்து அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கடத்திச் செல்ல வேண்டியது அவரின் போராட்ட குணத்தைதான்! கருணாநிதிக்கு ஐந்து வயதாக இருந்தபோது அவரும், அவரது நண்பர் தென்னனும் திருவாரூர் தெப்பக்குளத்தில் நீச்சல் அடித்து விளையாடிக் கொண்டிருந்தனர்.

காலம் பொன் போன்றது; கடைமை கண் போன்றது!
காலம் பொன் போன்றது; கடைமை கண் போன்றது!

இருவரும் நீந்தி பாதிக்குளம் அடைந்தபோது, தென்னன், 'நாம் திரும்பிச் சென்றுவிடலாம்' என கருணாநிதியிடம் கேட்டுள்ளார். அதற்கு கருணாநிதி, 'நண்பா நாம் திரும்பிச் செல்வதற்கு பதிலாக முன்னோக்கிச் சென்றால் மறுபக்க கரைக்கே சென்று விடலாம்' என்று கூறியதில் தொடங்கியது அந்தப் போராட்ட குணம். பள்ளியில் சேர்க்க மறுத்தால் குளத்தில் குதித்துவிடுவேன் என மிரட்டியதில் ஒளிந்திருக்கிறது அவரின் சாதுர்யமும், விடாப்பிடியான பிடிவாதமும்.

அதே உத்வேகத்துடன் கருணாநிதி...
அதே உத்வேகத்துடன் கருணாநிதி...

1984ஆம் ஆண்டு நடைபெற்ற கலைஞர் மணிவிழாவில் பேசிய கவிஞர் வைரமுத்து, ‘உன் மீது அடித்த புயல் திசை மாறி அடித்திருந்தால் இமயமலை கொஞ்சம் இடம் பெயர்ந்திருக்கும்; உன் மீது அடித்த வெய்யில் கடல் மீது அடித்திருந்தால் பாதி சமுத்திரம் பாலையாய்ப் போயிருக்கும்!

நீயோ, புயலில் சவாரி செய்தாய்; வெய்யிலை சமாதி செய்தாய்!’ என்று கருணாநிதியின் போராட்ட குணத்தை வரிகளாக்கினார்.

ஏனெனில், அவர் கருணாநிதி...
ஏனெனில், அவர் கருணாநிதி...

அதனால்தான் என்னவோ அவருக்கு கிடைக்கவேண்டிய ஆறடி இடத்தைக் கூட போராடி பெற்றிருக்கிறார் அவர். இன்றும் ஓராயிரம் கருணாநிதிகளுக்கான தேவை இருந்துகொண்டுதான் இருக்கிறது. இந்தியைத் திணித்து சமூகநீதியை சீர்குலைக்க வைக்க எத்தனிப்பவர்கள் இருக்கும்வரை அவர்களை எதிர்த்துச் சண்டை செய்ய கருணாநிதிகளின் தேவை அவசியமாகிறது.

இன்றும் ஓர் கல்லக்குடி வீரனைத் தமிழ்ச் சமூகம் தேடிக்கொண்டுதான் இருக்கிறது. தேட வைக்கும் தேவையும் உருவாகிக் கொண்டேதான் உள்ளது. இதுதான் அவரின் அவசியத்தை அடுத்த தலைமுறைக்கு உணர்த்துகிறது.

சீறிப்பாயும் கலைஞர்...
சீறிப்பாயும் கலைஞர்...

நடு இரவில் கைது செய்யப்பட்டு கட்டியிருந்த கைலியுடன் சிறை முன் தர்ணாவில் ஈடுபட்ட கருணாநிதியிடம் பத்திரிகையாளர் ஒருவர் பேனா, பேப்பரை கொடுத்து ஏதேனும் எழுதிக் கொடுங்கள் என்றபோது, எந்த சலனமுமின்றி “அநீதி வீழும்; அறம் வெல்லும்” என்று எழுதியது அந்த மந்திர விரல். ஆம், அவர் வழி நின்று ஆதிக்கத்திற்கு எதிராக குரல் கொடுக்க நினைப்பவர்கள் ஆழமாக உள்வாங்க வேண்டியது, அழுத்தமாக உச்சரிக்க வேண்டியது, உரக்கக் கூறவேண்டியது அதுதான், ‘அநீதி வீழும் அறம் வெல்லும்’!

'ஓடி வந்த இந்தி பெண்ணே கேள்... இன்றும் ஆயிரம் கருணாநிதிகள் உலாவிக்கொண்டுதான் இருக்கின்றனர். ஆகையால், நீ தேடி வந்த கோழை நாடு இதுவல்ல!'

அநீதி வீழும்; அறம் வெல்லும்!
அநீதி வீழும்; அறம் வெல்லும்!

பிள்ளைகளுக்கு தலை சிறந்த தந்தை, தொகுதி மக்களுக்கு சிறப்பான சட்டப்பேரவை உறுப்பினர், கட்சிக்கு வீரியம் மிக்க தலைவர், நாட்டிற்கு ஆற்றல்மிக்க முதலமைச்சர் என தான் கால் பதித்த இடங்களிலெல்லாம் தனக்கான முத்திரையைப் பதிக்கத் தவறாத திராவிட பேரினத்தின் தமிழ் பேராசான் கருணாநிதி என்றால் அது மிகையல்ல!

Intro:Body:Conclusion:
Last Updated : Jun 3, 2019, 12:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.