நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19 ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் பல கட்டங்களில் நடைபெறவுள்ளது. இதனால் அனைத்து கட்சிகளும் தேர்தல் வேலைகளில் மூம்மரமாக உள்ளனர்.
இந்நிலையில் திமுக கூட்டணி தொகுதி ஒதுக்கீடு பட்டியல் நாளை காலை 11 மணிக்கு வெளியிடப்படுகிறது. இந்த பட்டியலை திமுக தலைவர் அண்ணா அறிவாலயத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் முன்னிலையில் மு.க.ஸ்டாலின் வெளியிடுகிறார்.
ஏற்கனவே திமுகவிற்கு 20 வது தொகுதிகளும், காங்கிரஸிற்கு 10 தொகுதிகளும், விடுதலை சிறுத்தை கட்சி 2 இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டிற்கு 2 இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 1 தொகுதி, கொங்கு நாடு மக்கள் கட்சிக்கு 1, இந்திய ஜனநாயக கட்சிக்கு 1, மதிமுகவிற்கு 1 தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.