ETV Bharat / state

'அக்னி நட்சத்திரம்' உஷார் - பேரிடர் மேலாண்மை ஆணையம் வழங்கும் அறிவுரைகள் - agni natchatram

சென்னை: அக்னி நட்சத்திரம் தொடங்கியுள்ள நிலையில் அனல் காற்று வீசுவதால் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று  பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரித்துள்ளது.

அக்னி நட்சத்திரம்
author img

By

Published : May 6, 2019, 7:14 PM IST

Updated : May 7, 2019, 7:39 AM IST

தமிழ்நாட்டில் கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் கோடை வெயில் ஆரம்பமானது. தொடர்ந்து மார்ச், ஏப்ரல் மாதங்களில் சுட்டெரிக்கத் தொடங்கிய வெயில், தற்போது அக்னி நட்சத்திரம் ஆரம்பித்தவுடன் உச்சத்தை தொட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் பொதுமக்களுக்கு அறிவுரைகளை வழங்கியுள்ளது. இதுதொடர்பாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் கூறியிருப்பதாவது, உடலியல் பாதிப்புகளையும் இதன் விளைவாக மரணத்தையும் ஏற்படுத்தக் கூடியவை வெப்ப அலைகள் (அனல் காற்று), வெப்ப வலிப்பு காரணமாக ஏற்படும் மரணம் அல்லது தீவிரமான நோயிலிருந்து தடுக்கவும் மற்றும் வெப்ப அலையின்போது ஏற்படும் தாக்கத்தினை குறைப்பதற்கும் பின்வரும் நடவடிக்கைகளை செய்யலாம்.

கடைப்பிடிக்க வேண்டியவைகள்:

  • பயணங்களின்போது உடன் தண்ணீர் கொண்டு செல்ல வேண்டும்.
  • தாகம் ஏற்படாவிட்டால் கூட போதுமான தண்ணீரை போதிய இடைவேளையில் பருகி வர வேண்டும்.
  • வெளியே வேலை செய்தால், தொப்பி அல்லது குடை பயன்படுத்தவும்.
  • இலகுவான, வெளிர்நிறமுடைய, தளர்வான நுண்ணியப் பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்.
  • வெளியே அதிகமான வெப்பநிலை நிலவும்போது கடுமையான வேலைகள் மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியே வேலை பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.

  • Summer foods
    வெயிலுக்கு ஏற்ற உணவுகள்

எந்த மாதிரியான உணவுப் பொருட்களை எடுத்துக் கொள்ளலாம்?

  • உடலில் நீரிழப்பை ஏற்படுத்தக்கூடிய மதுபானம், தேநீர், காபி, கார்பனேற்றப்பட்ட பானங்களைத் தவிர்க்க வேண்டும்.
  • அதிக புரத சத்துள்ள உணவு, பழைய உணவுகளை தவிர்க்க வேண்டும்.
  • உடலில் நீர்ச்சத்து அதிகரிப்பதற்கு உதவும் வீட்டில் தயாரிக்கப்பட்ட லஸ்ஸி, அரிசி நீர், எலுமிச்சை சாறு, மோர், இளநீர், ஓ.ஆர்.எஸ். பயன்படுத்தலாம்.

இவ்வாறு பேரிடர் மேலாண்மை சார்பில் வழங்கப்பட்ட அறிவுரைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வெயில் தாக்கம் - பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுரை 

அனல் காற்று வீசுவதால் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று  பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் கோடை வெயில் ஆரம்பமானது. தொடர்ந்து மார்ச், ஏப்ரல் மாதங்களில் வெயில் சுட்டெரிக்க தொடங்கியது. இந்த நிலையில் கோடை வெயிலின்  உச்சம்  என்று அழைக்கப்படும் அக்னி நட்சத்திரம் வெயில் நேற்று முன்தினம் தொடங்கியது.  

இந்நிலையில் தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் பொதுமக்களுக்கு அறிவுரைகளை வழங்கியுள்ளது. இதுதொடர்பாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் கூறியிருப்பதாவது: 
உடலியல் பாதிப்புகளையும் இதன் விளைவாக மரணத்தையும் ஏற்படுத்தக் கூடியவை வெப்ப அலைகள் (அனல் காற்று), வெப்ப வலிப்பு காரணமாக ஏற்படும் மரணம் அல்லது தீவிரமான நோயிலிருந்து தடுக்கவும் மற்றும் வெப்ப அலையின் போது ஏற்படும் தாக்கத்தினை குறைப்பதற்கும் பின்வரும் நடவடிக்கைகளை செய்யலாம். 

* பயணங்களின் போது உடன் தண்ணீர் கொண்டு செல்ல வேண்டும்.

* தாகம் ஏற்படாவிட்டால் கூட போதுமான தண்ணீரை போதிய இடைவெளி விட்டு பருகி வர வேண்டும். 

* வெளியே வேலை செய்தால், தொப்பி அல்லது குடை பயன்படுத்தவும். மேலும் தலை, கழுத்து, முகம் மற்றும் மூட்டுகளில் ஈரமான துணியை பயன்படுத்தலாம். 

* பலவீனம், தலைவலி, குமட்டல், வியர்வை மற்றும் வலிப்பு போன்றவை, சருமத்தில் எரிச்சல் அல்லது தசை பிடிப்பு அறிகுறிகளை அடையாளம் காணவும். தலைசுற்றல் அல்லது உடல்நலக்குறைவாக உணர்ந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

* இலகுவான, வெளிர்நிறமுடைய, தளர்வான மற்றும் நுண்ணிய பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். பகலில் வெளியே செல்லும்போது பாதுகாப்பான கண்ணாடி, குடை, தொப்பி, காலணிகளை பயன்படுத்த வேண்டும்.

* திரைச்சீலைகள், தடுப்புகள்  பயன்படுத்தியும், இரவு நேரங்களில் சன்னல்களை திறந்து வைத்தும், வீட்டை குளுமையாக வைத்திருக்க வேண்டும்.

* மின்விசிறி, ஈரமான துணி பயன்படுத்தவும் மற்றும் அடிக்கடி குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும்.

* உடலில் நீர்ச்சத்து ஏற்றுவதற்கு உதவும் வீட்டில் தயாரிக்கப்பட்ட லஸ்ஸி, அரிசி நீர். எலுமிச்சை சாறு, மோர், இளநீர் மற்றும் ஓ.ஆர்.எஸ் பயன்படுத்தலாம்.

* அடர்த்தியான மஞ்சள் அல்லது ஆரஞ்சு மஞ்சள் நிறத்திலான சிறுநீர் கடுமையான நீரிழப்பைக் குறிக்கும்.

*  நிறுத்தியுள்ள வாகனங்களில் குழந்தைகளை தனியே விட்டுச் செல்லக்கூடாது.

* வெளியே அதிகமான வெப்பநிலை நிலவும் பொழுது கடுமையான வேலைகள் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும். நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியே வேலை பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.

* அடர்த்தியான நிறமுடைய, கனமான அல்லது இறுக்கமான ஆடைகள் அணிவதை தவிர்க்கவும்.

* நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.

* வெயில் உச்சத்தில் இருக்கும் நேரங்களில் சமைப்பதை தவிர்க்கவும். சமைக்கும் பகுதியில் போதுமான அளவிற்கு காற்றோட்டத்தை ஏற்படுத்த கதவு மற்றும் சன்னல்களை திறந்து வைக்க வேண்டும்.

* உடலில் நீரிழப்பை ஏற்படுத்தக் கூடிய மதுபானம், தேநீர், காபி மற்றும் கார்பனேற்றப்பட்ட பானங்களை தவிர்க்க வேண்டும்.

* அதிக புரத சத்துள்ள உணவு மற்றும் நாளான உணவுகளை தவிர்க்க வேண்டும்.

விலங்குகள்:

* நிழலில் விலங்குகளை வைத்து பராமரிக்க வேண்டும்.

* விலங்குகளுக்கு குடிக்க நிறைய தண்ணீர் வழங்க வேண்டும்.

* விலங்குகளை நிறுத்தியுள்ள வாகனங்களில் தனியே விட்டுச் செல்லக்கூடாது  இவ்வாறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பேரிடர் மேலாண்மை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
Last Updated : May 7, 2019, 7:39 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.