ETV Bharat / state

பொள்ளாச்சி வழக்கு: சிபிஐ ஏன் விசாரிக்கவில்லை? -நீதிபதி கேள்வி - pollachi scandal

சென்னை: பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பான வழக்குகளை ஏன் இன்னும் சிபிஐ வசம் ஒப்படைக்கவில்லை என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

HC
author img

By

Published : Apr 25, 2019, 11:15 AM IST

பொள்ளாச்சி பகுதியில் 70க்கும் மேற்பட்ட மாணவிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக அன்மையில் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பாக தமிழக அரசு சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டிருந்த நிலையில், முக்கிய அரசியல் புள்ளிகளின் பெயர்கள் இவ்விவகாரத்தில் அடிபடத்தொடங்கின. விஷயம் பூதாகரமாகவே, வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றியது தமிழக அரசு.

இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பான பொதுநலவழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பொள்ளாச்சி வழக்குகளை இன்னும் ஏன் சிபிஐ வசம் ஒப்படைக்கவில்லை என நீதிபதி இளந்திரையன் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அரசுத் தரப்பு, சிபிஐயிடமிருந்து இதுவரை எந்த பதிலும் வராததால் சிபிசிஐடி விசாரணையே மேற்கொள்ளப்படுவதாக விளக்கமளித்தது. சிபிசிஐடி விசாரணை நடத்தி, ஆதாரங்களை திரட்டி வருகின்றனர் என்றும் பதில் அளிக்கப்பட்டது. இந்த வழக்கை ஏன் இன்னும் கையில் எடுக்கவில்லையென பதிலளிக்குமாறு சிபிஐ இயக்குநர், இணை இயக்குநருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். வழக்கின் அடுத்த விசாரணை ஜூன் 6ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Intro:Body:

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பான வழக்குகளை சிபிஐ வசம் ஏன் இன்னும் ஒப்படைக்கவில்லை- நீதிபதி 

சிபிஐ தரப்பிடம் இருந்து இதுவரை எந்த பதிலும் வராததால் சிபிசிஐடி விசாரணை; சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து ஆதாரங்களை திரட்டி வருகின்றனர் - தமிழக அரசு

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.