அத்திப்பட்டு, வடசென்னை அனல்மின் நிலையத்தில், முன்னாள் முதலமைச்சர், கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு மின் கழகத் தொழிலாளர் முன்னேற்றம் சங்கம் சார்பில் நடைபெற்ற விழாவில், 3000 பேருக்கு நலத்திட்ட உதவிகளைத் தொழிலாளர் முன்னேற்றச் சங்க பொதுச்செயலாளர் சிங்காரரத்தின சபாபதி மற்றும் மாநில தலைவர் சசிகுமார் ஆகியோர் வழங்கினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தொமுச மாநில தலைவர் சசிகுமார், தமிழ்நாடு முழுவதும் அனல் மின் நிலையங்களில் கடந்த எட்டாண்டுகளுக்கு மேலாக பணிபுரியும், ஒப்பந்த பணியாளர்களை நிரந்தரம் செய்யாமல், அரசு புதிதாக 5000 கேங்க் மேன் பதவியை உருவாக்கி, நேரடியாக ஒப்பந்த பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்வதைத் தடுக்க முயல்கின்றனர்.
வடசென்னை அனல்மின் நிலையத்தில் தலைமை பொறியாளர் பல்வேறு ஊழல்களைத் தொடர்ந்து செய்து வருகிறார். மின் வாரிய தலைவர் இடத்திலேயே புகார் அளித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காத சூழ்நிலையில், ஒருவாரத்திற்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் வடசென்னை அனல் மின் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும்’ எனக் கூறினார்.