ETV Bharat / state

சி.பி.எஸ்.இ. 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் - சென்னை மண்டலம் 2ஆம் இடம்

சென்னை: சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் 99 சதவிகிதத் தேர்ச்சியுடன் சென்னை மண்டலம் தேசிய அளவில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது.

சி.பி.எஸ்.இ
author img

By

Published : May 6, 2019, 5:15 PM IST

சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி முதல் ஏப்ரல் 4 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதற்கான தேர்வு முடிவுகள் இன்று மதியம் 2.40 மணியளவில் வெளியாகியுள்ளது. மொத்தம் 4 ஆயிரத்து 974 மையங்களில் 17 லட்சத்து 61 ஆயிரத்து 78 மாணவர்கள் தேர்வினை எழுதினார்கள். அவர்களில் 16 லட்சத்து 4 ஆயிரத்து 428 மாணவர்கள் தற்போது தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்தாண்டு தேர்ச்சி விகிதம் 86.70 சதவிகிதமாக இருந்த நிலையில் இந்தாண்டு 4.40 சதவிகிதம் அதிகரித்து 91.10 சதவிகிதமாக உள்ளது.

இதில் மாணவிகளில் 92.45 சதவிகிதமும், மாணவர்கள் 90.14 சதவிகிதமும், திருநங்கைகள் 94.74 சதவிகிதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மண்டல அளவில் திருவனந்தபுரம் 99.85 சதவிகிதம் தேர்ச்சி பெற்று முதலிடம் பெற்றுள்ளது. சென்னை மண்டலம் 99 சதவிகிதம் தேர்ச்சி பெற்று 2ஆம் இடத்தையும், அஜ்மீர் மண்டலம் 95.89 சதவிகிதம் பெற்று 3ஆம் இடத்தையும் பெற்றுள்ளது. தேர்வு எழுதிய 5 ஆயிரத்து 233 மாற்றுதிறனாளி மாணவர்களில் 5 ஆயிரத்து 23 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 13 மாணவர்கள் 499 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும், 25 மாணவர்கள் 498 மதிப்பெண்கள் பெற்று 2ஆம் இடத்தை பெற்றுள்ளனர்.

 சிபிஎஸ்இ 10 ம் வகுப்பு பொதுத் தேர்வு .
91.10 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி

சென்னை, 
சிபிஎஸ்இ 10 ம் வகுப்பு பொதுத் தேர்வில் 91.10 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

சிபிஎஸ்இ 10 ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு பிப்ரவரி மாதம் 15 ந் தேதி முதல் ஏப்ரல் 4 ந் தேதி வரையில் நடைபெற்றது. இவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று மதியம் 2.40 மணிளவில் வெளியிடப்பட்டது. 
10 ம் வகுப்பு பொதுத் தேர்வினை 2019ம் ஆண்டில் எழுதுவதற்கு 19ஆயிரத்து 298 பள்ளிகளில் இருந்து  17 லட்சத்து 74 ஆயிரத்து 299 மாணவர்கள்  பதிவு செய்திருந்தனர். அவர்களில் 17 லட்சத்து 61 ஆயிரத்து 78 மாணவர்கள் 4 ஆயிரத்து 974 மையங்களில்  தேர்வினை எழுதினார்கள். அவர்களில் 16 லட்சத்து 4 ஆயிரத்து 428 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 91.10 சதவீதமாக உள்ளது.  கடந்த ஆண்டு 16 லட்சத்து 24 ஆயிரத்து 682 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 14 லட்சத்து 8ஆயிரத்து 594 மாணவர்கள் தேர்ச்சி பெற்று 86.70 சதவீதமாக இருந்தது. இந்த ஆண்டு கடந்த ஆண்டைவிட மாணவர்கள் 4.40 சதவீதம் அதிகமாக தேர்ச்சி பெற்று தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது.  தேர்வு எழுதிய மாணவிகளில் 92.45 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்னர். மாணவர்கள் 90.14 சதவீதமும், திருநங்கைகள் 94.74 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களைவிட மாணவிகள் 2.31 சதவீதம் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். 

மண்டல அளவில் திருவனந்தபுரம் 99.85 விழுக்காடு தேர்ச்சி பெற்று முதலிடத்தையும், சென்னை மண்டலம் 99 சதவீதம் தேர்ச்சி பெற்று 2 ம்இடத்தையும், அஜ்மீர் மண்டலம் 95.89 சதவீதம் பெற்று 3ம் இடத்தையும் பெற்றுள்ளது. 
பள்ளிகளின் அடிப்படையில் கேந்திரியா வித்யாலயா பள்ளி மாணவர்கள் 99.47 சதவீதமும், ஜவகர்நவோதயா வித்யாலயா பள்ளி மாணவர்கள் 98.57 சதவீதமும், தனியார் பள்ளிகள் 94.15 சதவீதமும், மத்திய திபெத்திய பள்ளிகள் 91.82 சதவீதமும், அரசு உதவிப்பெறும் பள்ளிகள் 76.95 சதவீதமும், அரசுப் பள்ளிகள் 71.91 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளன. 
மாற்றுதிறனாளி மாணவர்கள் 5,233 பேர் தேர்வு எழுதியதில் 5 ஆயிரத்து 23 பேர் 95.99 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 
 13 மாணவர்கள் 499 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளனர். 25 மாணவர்கள் 498 மதிப்பெண்கள் பெற்று 2ம் இடத்தை பெற்றுள்ளனர். 
அனைத்துப் பாடத்திலும் 2,25,143 மாணவர்கள் 90 சதவீத்திற்கு மேல் மதிப்பெண் எடுத்துள்ளனர். 95 சதவீத்திற்கு மேல் 57,256 மாணவர்கள் மதிப்பெண்களை பெற்றுள்ளனர். 

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.