ETV Bharat / state

தாய் மரணத்தில் மர்மம்: தந்தை மீது நடவடிக்கை எடுக்க மகன்கள் வலியுறுத்தல்!

author img

By

Published : Apr 4, 2019, 11:31 AM IST

சென்னை: தாயின் மரணத்தில் தந்தை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மகன்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

Chennai lady murder case husband arrested

சென்னை அம்பத்தூர் அடுத்த ஓரகடம் எஸ்.வி.நகர் பெருமாள் கோவில் தெருவில் வசித்துவந்தவர் சுமதி (38). இவரது கணவர் மூர்த்தி (44). இவர் பூந்தமல்லி அடுத்த மலையம்பாக்கம் கிராமத்தில் வசித்துவருகிறார். தனியார் நிறுவன ஊழியர். இத்தம்பதிக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.

இதற்கிடையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சுமதி பிரிந்து வாழ்ந்துவந்தார். பின்னர் அவர் அம்பத்தூரில் தனது பெற்றோர் வீட்டில் தஞ்சம் அடைந்தார். இவருடன் இரண்டு மகன்களும் சென்றுவிட்டனர். ஒரு மகள் மட்டும் தந்தையுடன் வசித்துவருகிறார்.

இந்நிலையில் கணவர் மூர்த்தியை பார்த்துவிட்டு வருவதாக வீட்டில் இருந்து சென்ற சுமதி, காணவில்லை. இது குறித்து மூர்த்தியிடம் கேட்டதற்கு முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார். இதில் சந்தேகமடைந்த மகன்கள் தங்களது தாய்காணவில்லை என காவல் துறையில் புகார் அளித்துள்ளனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவந்தனர். இதற்கிடையில் சுமதி அம்பத்தூர் ரயில்வே மேம்பாலம் அருகே தண்டவாளத்தில் படுகாயங்களுடன் சடலமாக கிடப்பதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆவடி ரயில்வே காவல் துறையினர் சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்நிலையில்இரு மகன்கள், உறவினர்கள் சுமதியின் இறப்பில்மூர்த்தி மீது சந்தேகம் உள்ளது எனவும் இது குறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் காவல் துறையினரிடம் வலியுறுத்தினர்.இதன் அடிப்படையில் ரயில்வே காவல் துறையினர்மூர்த்தியிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.

Intro:தாயின் மரணத்தில் மர்மம் இருப்பதாக தனது தந்தை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மகன்கள் கண்ணீருடன் காவல்நிலையத்தில் புகார் அளித்ததால் பரபரப்பு.

Body:சென்னை அம்பத்தூர் அடுத்த ஓரகடம் எஸ்.வி.நகர் பெருமாள் கோவில் தெருவில் வசித்து வந்தவர் சுமதி/38. இவரது கணவர் மூர்த்தி/44.இவர் பூந்தமல்லி அடுத்த மலையம்பாக்கம் கிராமத்தில் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவன ஊழியர் இவர்களுக்கு 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். இதற்கிடையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சுமதி பிரிந்து வாழ்ந்து வந்தார். பின்னர் அவர் அம்பத்தூரில் தனது பெற்றோர் வீட்டில் தஞ்சம் அடைந்தார். இவருடன் இரண்டு மகன்களும் சென்றுவிட்டனர். ஒரு மகள் மட்டும் தந்தையுடன் வசித்து வருகிறார்.இந்நிலையில் மாலை சுமதி கணவர் மூர்த்தியை பார்த்துவிட்டு வருவதாக வீட்டில் இருந்து புறப்பட்டார்.பின்னர் அவர் நள்ளிரவு ஆகியும் வீடு திரும்பவில்லை சந்தேகமடைந்த மகன்கள் தந்தையிடம் தாய் சுமதி பற்றி கேட்டுள்ளனர். தந்தை மூர்த்தி முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறவே மகன்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.இதற்கிடையில் சுமதி அம்பத்தூர் ரயில்வே மேம்பாலம் அருகே தண்டவாளத்தில் படுகாயங்களுடன் சடலமாக கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆவடி ரயில்வே போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் சுமதி இரு மகன்கள் மற்றும் உறவினர்கள் அவரது சாவில் சந்தேகம் உள்ளது எனவும் இது குறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் போலீசாரிடம் வலியுறுத்தினர். மேலும் இதன் அடிப்படையில் ரயில்வே காவல்துறை ஆய்வாளர் ஞான ஒரு ராஜாமணி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சுமதி தண்டவாளத்தை கடக்கும் போது ரயில் மோதி இறந்தாரா அல்லது அவரை யாராவது அடித்துக் கொன்று தண்டவாளத்தில் விசினாரா என்று போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கணவர் மூர்த்தியையும் காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரித்து வருகின்றனர்.இச்சம்பவம் அம்பத்தூர்,ஓரகடம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Conclusion:மேலும் கணவர் மூர்த்தியையும் காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரித்து வருகின்றனர்.இச்சம்பவம் அம்பத்தூர்,ஓரகடம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.