அண்ணா பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் உள்ள கல்லுாரிகளில் 2 ஆண்டுகள் எம்.எஸ்சி, எம்.பில் ஆகிய பட்டப்படிப்புகளுக்கு ஆன்லைன் மூலம் இன்று முதல் விண்ணப்பங்கள் தொடங்கியுள்ளன.
கணக்கு, மெட்டீரியல் அறிவியல், மெடிக்கல் பிசிக்ஸ், அப்ளைடு கெமிஸ்டிரி, அப்ளைடு ஜியோலாஜி, எலக்ட்ரானிக் மீடியா ஆகிய பாடப்பிரிவுகளில் எம்.எஸ்சி பட்டப்படிப்பும், எம்.பில் பாடத்தில் கணக்கு, இயற்பியல், மெடிக்கல் பிசிக்ஸ், வேதியியல், ஆங்கிலம், கிரிஸ்டல் சயின்ஸ், அப்ளைடு ஜூயோலாஜி ஆகிய பாடப்பிரிவுகளிலும் மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.
இதற்கு ஏப்ரல் 30ஆம் தேதி முதல் மே 20ஆம் தேதி வரையில் ஆன்லைன் முலம் விண்ணப்பிக்கலாம். www.annauniv.edu என்ற இணையதளத்தில் மேலும் விபரங்களை அறிந்துகொள்ளலாம். இவர்கள் விண்ணப்பக்கட்டணமாக பொதுப்பிரிவில் ரூ.700ம், எஸ்.சி, எஸ்.சிஏ, எஸ்.டி ஆகிய பிரிவினருக்கு 350 ரூபாயும் கட்டணமாக செலுத்த வேண்டும். எம்.எஸ்சி பட்டப்படிப்பிற்கு இளங்கலை பட்டப்படிப்பினை முடித்தவர்களும், எம்.பில் படிப்பிற்கு முதுகலை பட்டப்படிப்பினை முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.
இவர்களுக்கான நுழைவுத் தேர்வு ஜூன் 8ஆம் தேதி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மட்டும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.