கட்டாய தலைகவசம் என்ற பெயரில் பொதுமக்களுக்கு தொல்லை கொடுக்கும் அரசையும், துணைநிலை ஆளுநரையும் கண்டித்து புதுச்சேரி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஹெல்மெட்டை கையில் வைத்தபடி கண்டன கோஷங்களை எழுப்பி எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனை அங்கு பணியில் இருந்த பாதுகாவலர்கள் தடுக்க முயன்றனர். அதனை மீறி சட்டமன்ற உறுப்பினர்கள் ஹெல்மெட்டை ஆவேசமாக உடைத்தனர். சட்டமன்ற உறுப்பினர்களின் திடீர் போராட்டத்தால், சட்டப்பேரவை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.