சென்னை லயோலா கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி எண் 229-ல் நடிகர் கௌதம் கார்த்திக் தனது வாக்கை பதிவு செய்ய இன்று காலை வந்தார். அவர் பொதுமக்களுடன் வரிசையில் நின்று தனது வாக்கை அவர் பதிவு செய்தார்.
பின்னர் தான் வாக்களித்ததன் அடையாளமான மை வைக்கப்பட்ட விரலை காண்பித்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசினார், நாம் அளிக்கும் வாக்கில்தான் அனைத்து சக்தியும் உள்ளது. சரியான ஜனநாயகத்தை தேர்ந்தெடுப்பதற்கான சக்தி வாக்களிப்பது நான் எனது வாக்கை செலுத்தி உள்ளேன். இளைஞர்கள் அனைவரும் தவறாமல் வாக்களியுங்கள். கண்டிப்பாக நல்லதே நடக்கும் என தெரிவித்தார்.