சென்னை-சேலம் எட்டு வழி பசுமைச்சாலை திட்டத்தை, ரூ.10 ஆயிரம் கோடி செலவில் செயல்படுத்த மத்திய-மாநில அரசுகள் முடிவு செய்தன. இந்த திட்டத்திற்காக நிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போது, விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த எட்டு வழி சாலைத் திட்டத்திற்கு எதிராக, விவசாயிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் முந்தைய விசாரணையின் போது, நிலத்தை கையகப்படுத்த தடை விதித்திருந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கிற்கான தீர்ப்பு நீதிபதி சிவஞானம், பவானி அமர்வு முன் வருகிற ஏப்ரல் 8ஆம் தேதி வரவுள்ளது.