ETV Bharat / state

‘2ஜி பணத்தை நம்பிதான் ராகுல் இருக்கிறார்’ - சரத்குமார் தாக்கு! - 2ஜி ஊழல் பணம்

சென்னை: 2ஜி ஊழல் பணத்தை வைத்துதான் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள ஏழை மக்களுக்கு மாதம் 6 ஆயிரம் வழங்கும் திட்டத்தை ராகுல் அறிவித்திருப்பதாக சமக தலைவர் சரத்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்
author img

By

Published : Mar 30, 2019, 9:36 AM IST

தென்சென்னை அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் ஜெயக்குமாரை ஆதரித்து அனைத்து இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் சென்னை சைதாப்பேட்டையில் இன்று பரப்புரை மேற்கொண்டார்.

மீசகார நண்பா... உனக்கு பாசம் அதிகம் டா!

அப்போது பேசிய அவர், "2011 தேர்தலில் இருந்து சமத்துவ மக்கள் கட்சி இதுவரை அதிமுகவுடன் பயணித்துக் கொண்டிருப்பதை தான் பெருமையாக கருதுவதாகவும், 8 ஆண்டுகள் அதிமுகவுடன் கூட்டணியில் இருந்து வருவதாகவும், ஜெயலலிதா இல்லாத முதல் தேர்தலை சந்திக்க இருப்பதாகவும் அவர் கூறி உணர்ச்சிவசப்பட்டார்.

சந்தர்ப்பவாத கூட்டணி

இந்தக் கூட்டணியை சந்தர்ப்பவாத கூட்டணி என்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கூறுவதற்கு முன் அந்தக் கூட்டணியில் இருப்பவர்கள் யார் என்று சிந்தித்து பார்க்க வேண்டும் என்றும், அந்த கூட்டணியில் உள்ள வைகோ ஈழத்தமிழர் பிரச்னையின் போது ஸ்டாலினை என்னவெல்லாம் கூறினார் என்பதையும் இணையதள வாயிலாக தெரிந்து கொள்ளலாம் என்றும் கூறினார்.

பேசா பிரதமரை உருவாக்கிய காங்கிரஸ் !

பேசாத ஒரு பிரதமரை உருவாக்கிய பெருமை காங்கிரஸ் கட்சியை மட்டுமே சாரும். மீண்டும் அதுபோல ஒரு பிரதமரை உருவாக்க கூடாது என்பதற்காகவே தாங்கள் பாடுபடுவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் அவர் காங்கிரஸ் கூட்டணியில் பல ஊழல்கள் நடந்துள்ளன என்றும், அதில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் முக்கியமான ஒன்று என்றும் தெரிவித்தார். மேலும், அதில் 1 லட்சத்து 74 ஆயிரம் கோடி ஊழல் செய்தனர், அந்த பணத்தை வைத்துதான் தற்போது ராகுல் காந்தி அறிவித்துள்ள வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு மாதம் 6 ஆயிரம் என்ற முறையில் ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை நிறைவேற்ற இருக்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.

சமக தலைவர் சரத்குமார் பரப்புரை

தென் சென்னை அ.தி.மு.க வேட்பாளர் ஜெயவர்தனை ஆதரித்து அனைத்து இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் சென்னை சைதாப்பேட்டையில் இன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவர், "2011 தேர்தலில் இருந்து சமத்துவ மக்கள் கட்சி இறுவரை அ.தி.மு.க.வோடு பயனித்து கொண்டிருப்பதை நான் பெருமையாக கருதுகிறேன். தனித்து போட்டி என்று முடிவு எடுத்து பயணித்த வேலையில் எட்டு ஆண்டு அ.தி.மு.க. வுடன் கூட்டணியில் இருந்தீர்கள். அம்மா இல்லாத முதல் தேர்தலை சந்திக்க உள்ளோம். மத்தியிலே சிறந்த ஆட்சி அமைய இருக்கிறது. நீங்களும் ஆதரவு தர வேண்டும் என்று கேட்டவுனேயே நாங்கள் ஆதரவு தெரிவிப்பதற்கு முதல் முக்கிய காரணப் புரட்சிதலைவி அம்மா தானே என்பதில் நான் பெருமை கொள்கிறேன்.

எல்லோருக்கும் எல்லாம் என்று ஏழை பணக்காரன் என்ற பாகுபாடின்றி சிறந்த முறையில் ஆட்சி அளித்தவர் புரட்சிதலைவி என்பதை நாம் எந்நாளும் மறக்க முடியாது. அவர் விட்டுச் சென்ற பணியை சிறந்த முறையில் தொடரும் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இன்று ஒரு மெகா கூட்டணி அமைத்துள்ளார் என்று சொன்னால் இது அ.தி.மு.க. வுக்கு கிடைத்த முதல் வெற்றி என்றே சொல்ல வேண்டும்.

இந்தக் கூட்டணியை சந்தர்ப்பவாத கூட்டணி என்று சட்டையை கிழித்து கொண்டு வந்த எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சந்தர்பவாத கூட்டணியை பற்றி அவர் தான் பரிசீலித்து கொள்ள வேண்டும். அந்தக் கூட்டணியில் இருப்பர்கள் யார் என்று சிந்தித்து பார்க்க வேண்டும். அந்த கூட்டணியில் உள்ள வைகோ அவர்கள் ஈழ தமிழர் பிரச்னையின் போது ஸ்டாலினை என்னவெல்லாம் கூறினார் என்பதை இணையதள வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.

சந்தர்ப்பவாத கூட்டணி என்ன என்பதை புரிந்து கொள்ள வேண்டும். காங்கிரஸ் மீடும் ஆட்சி பீடத்தில் அமரும் போது - கனவில் தான் நடக்கும், அந்த நிலை உருவாகிவிட்டால் அன்று கலைஞர் சென்று அனைத்து அமைச்சர் பதவியும் பெற்றது போல் தற்போது ஸ்டாலின் எண்ணி பிரச்சாரம் செய்து வருகின்றார். 2004 தேர்தலில் காங்கிரஸ் 145 இடமும், 2009 தேர்தலில் 205 இடமும் பிடித்தது. ஆனால் கூட்டணி ஆட்சி அமைத்து அனைவரும் நெருக்கடி கொடுக்கின்ற நிலையை உருவாக்கி பேசாத ஒரு பிரதமரை உருவாக்கிய பெருமை காங்கிரஸ் கட்சியை சாரும். அவரவருக்கு நெருக்கடி கொடுத்து அனைவருக்கும் அமைச்சரவை கிடைத்து மக்கள் நலனுக்கு தீட்டிய திட்டமெல்லாம் மக்களுக்கு சென்றடையாமல் செய்தது காங்கிரஸ் ஆட்சி தான். எனவே அப்படிப்பட்ட ஆட்சி அமைய கூடாது என்பதால் இந்த மெகா கூட்டணி அமைந்துள்ளது.

காங்கிஸ் கூட்டணியில் பல ஊழல்கள் நடந்துள்ளன. அதில் 2ஜி ஸ்பெக்ட்ரம் முக்கியமான ஒன்று. இது நாள் வரையில் நம்மால் மறக்க முடியாத ஊழல். 1 லட்சத்து 74 ஆயிரம் கோடி ஊழல் செய்தனர். அந்த பணத்தை வைத்து தான் தற்போது ராகுல் காந்தி அறிவித்துள்ள 6 ஆயிரம் ரூபாயை வழங்கவுள்ளனர். வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு மாதம் 6 ஆயிரம் என்ற முறையில் ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய். இது 5 கோடி மக்களுக்கு வழங்கவுள்ளனர்.

அப்படியென்றால் 3 லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை அவர்கள் செலவிடத் தயாராக உள்ளனர் என்று அவர்களின் தேர்தல் அறிக்கை சொல்கிறது. அது கல்வி, சுகாதாரம், விவசாயம் என்ற அடிப்படை தேவைகளுக்கு ஒதுக்கும் நிதியை விட அதிகமாக உள்ளது. இந்த தொகையை தி.மு.க நடத்திய 2ஜி ஸ்பெக்ட்ரம் மற்றும் சிறந்த ஊழல்களில் சேர்த்த பணத்திலலிருந்து ராகுல் காந்தி கொடுக்கவுள்ளார். சந்தர்ப்பவாத கூட்டணி என்று இவர்கள் பேசுகின்றனர்.

வாரிசு அரசியலை பற்றி அவர்கள் பேசி வருகின்றனர். உதயநிதி ஸ்டாலின் யார் வாரிசு இல்லையா. நான் ஒரு நிறுவனம் வைத்திருந்தால் அதில் எனது வாரிசு ஆர்வத்தையும், உழைப்பையும் கொடுத்தால் அவர்கள் பொறுப்பு வகிக்க எந்த தவறும் இல்லை. தகுதியில்லை என்றால் வாரிசை பொறுப்பில் அமரவிட கூடாது. அவ்வாறு தகுதியும், திறமையும் இருக்குமானால் அவர்கள் வருவதற்கு வாய்ப்பளிக்க வேண்டும்.

அ.தி.மு.க வேட்பாளர் ஜெயவர்தனை பற்றி கூற வேண்டுமென்றால் அவர் படித்தவர், பண்பு  மிக்கவர், பாராளுமன்றத்தில் மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர். பாராளுமன்றத்தில் சிப்பெட் இடம் மாற்றுவதை பற்றிய விவகாரத்தில் அதை தடுத்து நிறுத்தியவர் என்று கூறுவதில் பெருமை கொள்கிறேன்.

இரண்டு ஆண்டு காலமாக மாலுமி இழந்த கப்பலை போல் தலைவியை இழந்த ஆட்சியை சிறப்பாய் நடத்தி வருகிறார் முதல் எடப்பாடி பழனிசாமி. இத்தகைய சூழலில் சிறந்த கூட்டணி அமைந்த அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் அவர்களை எண்ணி பார்க்க வேண்டும்.

கொள்கை, கோட்பாடு அடிப்படையில் பல்வேறு கருத்துகளை எடுத்துரைக்கும் கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளனர் என்று சொன்னால் மத்தியில் ஒரு நல்ல ஆட்சி அமைய வேண்டும் என்பது தான். சிறந்த ஒரு ஆட்சியை பாரதிய ஜனதா கட்சி பிரதமராக இருக்கும் மோடி அவர்களால் தான் உருவாக்க முடியும். புல்வாமா தாக்குதலில் தகுந்த பதிலடி உடனடியாக கொடுக்கப்பட்டது.

சிறந்த ஆட்சி அமைய வேண்டும் என்று சொன்னால் அது கூட்டணி ஆட்சியாக இல்லாமல் பெருபான்மை பெற்ற ஆட்சியாக அமைய வேண்டும். கூட்டணி ஆட்சியில் மந்திரி பதவிக்காக எப்படி ஒருவரையொருவர் அடித்து சண்டையிட்டு கொண்டிருந்தனரோ அப்படிதான் நடக்கும். இங்கு பெருமையோடு ஒன்றை சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். மேல் சபையோடு சேர்த்து மொத்தம் 50 பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்டிருந்தும் மந்திரி பதவிகளில் அங்கம் வகிக்காத சுயநமில்லாத இயக்கம் அ.தி.மு.க. தான். எனவே இந்த மெகா கூட்டணியின் ஆதரவோடு போட்டியிடும் ஜெயவர்தனை ஆதரித்து வாக்களியுங்கள்" என்று தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.