அரியலூர் மாவட்டம் செந்துறைப் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் செந்துறை காவல் நிலையம் முன்பு மதுபோதையில் சுற்றித் திரிந்துள்ளார். அருகில் இருந்தவர்களைத் தகாத சொற்களால் திட்டிக்கொண்டிருந்த அவர், திடீரென சாலையில் சென்றுகொண்டிருந்த டிப்பர் லாரியை நிறுத்தி அதன் முன்பக்க டயரில் படுத்துக்கொண்டார்.
அதைக்கண்ட லாரி ஓட்டுநர் அவரைப் பிடித்து இழுக்க இளைஞர் டயரைக் கட்டிப்பிடித்துக்கொண்டு 'நான் வரமாட்டேன்' என ஒரு குழந்தை போல் அடம்பிடித்துள்ளார்.
மேலும், ஓட்டுநரை அந்த மதுப்பிரியர் படாதபாடுபடுத்தியுள்ளார். அதையடுத்து தகவல் அறிந்து வந்த அவரது உறவினர்கள், பொதுமக்கள் உதவியுடன் அரை மணி நேரப் போராட்டத்திற்கு பிறகு லாரி டயரிலிருந்து அவரை குண்டுகட்டாக தூக்கி அப்புறப்படுத்தினர்.
அவரால் அப்பகுதியில் அரைமணி நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. மேலும் இது குறித்து காவல் துறையினர் அந்த இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.
இதையும் படிங்க: சாலையில் மல்லாக்க படுத்து மாஸ்காட்டிய மதுப்பிரியர்!