அரியலூர் மாவட்டம் கீழப்பலூர் வவுசி நகரைச் சேர்ந்தவர் மலர்கொடி. பால் வியாபாரம் செய்துவந்தார். இவரது கணவர் 20 ஆண்டுகளுக்கு முன்பு காலமாகிவிட்டார்.
இந்நிலையில் மலர்கொடி இன்று (அக்.25) காலை வீட்டின் முன்புறத்தில் பிணமாக கிடந்தார். இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் கீழப்பலூர் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள், அவரை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், மாட்டு வியாபாரியான சரவணன் என்பவருக்கும், மலர்கொடிக்கும் கடந்த 10 ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து சரவணனின் மகன் பழநிவேலிடம் காவலர்கள் விசாரணை நடத்திவருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இதையும் படிங்க: ஆந்திராவை கலங்கவைத்த சைபர் கொள்ளையர்கள்: ஏடிஎம்மில் நூதன திருட்டு!