திமுக தலைவர் ஸ்டாலின் விரும்பினால் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடத் தயார் என்று, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நீட் விவகாரத்தால் தற்கொலை செய்துகொண்ட அனிதாவின் நினைவாக அரியலூர் மாவட்டம் செந்துறையை அடுத்த குழுமூரில் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அனிதா நூலகத்துக்கு வெள்ளிக்கிழமை இரவு வந்த உதயநிதி ஸ்டாலின், புத்தகங்களை வழங்கி நூலகத்தில் உறுப்பினராக இணைந்துகொண்டார்.

அதனையடுத்து நூலக வளாகத்தில் மரக்கன்றுகளை நட்ட உதயநிதி, பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவது பற்றிய தனது நிலைப்பாட்டைத் தெரிவித்தார்.
இதையும் படிங்க கடலூர் மாவட்ட திமுக சார்பில் உதயநிதிக்கு நினைவுப்பரிசு