அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள கடம்பூர் கிராமத்தில் கடந்த மே மாதம் 17ஆம் தேதி கந்தசாமி என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் செந்துறை காவல்துறையினர் ஐந்து பேரை கைது செய்தனர்.
பின்னர், இவர்கள் அனைவரும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். கொலை வழக்கில் தொடர்புடைய கவுன்சிலர் கலா மற்றும் வளர்மதி, பவித்ரன் ஆகியோரை இன்றுவரை காவல்துறையினர் கைது செய்யவில்லை என அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டிவருகின்றனர்.
இது தொடர்பாக, காவல்துறையினரிடம் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு சென்று மனு அளிக்க திட்டமிட்டனர்.
ஆனால், அங்கு காவல் கண்காணிப்பாளர் இல்லாததால் துணை காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர்
மேலும், குற்றவாளிகளை விரைவில் கைது செய்யாவிட்டால் போராட்டம் நடத்த உள்ளதாகவும் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: கிரிவலப்பாதை மகா நந்திக்கு நடந்த ஆடி மாத பிரதோஷ பூஜை!