ETV Bharat / state

இறந்தவர்களின் பெயரில் நடக்கும் மோசடி: நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் அதிர்ச்சி - கிராம மக்கள்

அரியலூர்: நூறுநாள் வேலைவாய்ப்பு திட்டத்தை முறையாக பகிர்ந்தளிக்காமல் அலுவலர்களுக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் வழங்குவதாக கிராம மக்கள் குற்றம்சாட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

File pic
author img

By

Published : Jun 7, 2019, 8:42 AM IST

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள பெரியவளையம் ஊராட்சியில் நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் தகுதியற்றவர்களுக்கு வேலை வழங்கியதாக அறிக்கை தயார் செய்து ஊழல் செய்வதாகவும் நீண்ட நாட்களாக 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் ஊதியம் வழங்காததை கண்டித்தும் கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது, வெளிநாட்டில் வேலை செய்பவர்கள், இறந்தவர்களின் பெயர்கள், ஒரு நபருக்கு இரண்டு அட்டை என தகுதியற்றவர்களுக்கு 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் வேலை வழங்கியதாக பொய்யான அறிக்கை தயார் செய்து ஊழல் செய்துவருகின்றனர்.

கிராம மக்கள் ஆர்பாட்டம்

100 நாள் வேலை வாய்ப்பை அனைவருக்கும் பகிர்ந்தளிக்காமல் தனக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் அரசின் விதியை மீறி அதிக நாட்கள் வேலை வழங்கிவருகின்றனர்.

இதற்கு உடந்தையாக உள்ள ஊராட்சி செயலர், களப்பணியாளர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த ஊழலை கண்டும் காணாமல் இருந்துவரும் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுத்து 100 நாள் வேலைவாய்ப்பு குறித்த ஆவணங்களை முறையாக தணிக்கை செய்ய வேண்டும்.

100 நாள் வேலை செய்த மக்களுக்கு நீண்ட நாட்களாக சம்பளம் வழங்காமல் உள்ளதாகவும் சம்பளத்தை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

அரியலூர் & வெளிநாட்டில் வேலை செய்பவர்கள் நூறுநாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலை செய்வதாக கணக்கு காட்டி ஊழல் நடைபெறுவதாக குற்றம் சாட்டும் கிராம மக்கள் ஊழலுக்கு உடந்தையாக உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் 

   அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள பெரியவளையம் ஊராட்சியில் நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.  இத்திட்டத்தில் தகுதியற்றவர்களுக்கு வேலை வழங்கியதாக அறிக்கை தயார் செய்து ஊழல் செய்வதாகவும் நீண்ட நாட்களாக 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் ஊதியம் வழங்காததை கண்டித்தும் கிராம மக்கள் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வெளிநாட்டில் வேலை செய்பவர்கள், இறந்தவர்களின் பெயர்கள் மற்றும் ஒரு நபருக்கு இரண்டு அட்டை என தகுதியற்றவர்களுக்கு 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் வேலை வழங்கியதாக பொய்யான அறிக்கை தயார் செய்து ஊழல் செய்து வருகின்றனர். 100 நாள் வேலை வாய்ப்பை அனைவருக்கும் பகிர்ந்தளிக்காமல் தனக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் அரசின் விதியை மீறி அதிக நாட்கள் வேலை வழங்குவதாக கிராம மக்கள் குற்றம் சாட்டினர். இதற்கு உடந்தையாக உள்ள ஊராட்சி செயலர் மற்றும் களப்பணியாளர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்ஊழலை கண்டும் காணாமல் இருந்து வரும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து 100 நாள் வேலைவாய்ப்பு குறித்த ஆவணங்களை முறையாக தணிக்கை செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். மேலும் 100 நாள் வேலை செய்த மக்களுக்கு நீண்ட நாட்களாக சம்பளம் வழங்காமல் உள்ளதாகவும் சம்பளத்தை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர். ஆர்ப்பாட்டத்தில் பெரியவளையம் கிராம மக்கள் பலரும் கலந்து கொண்டனர்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.