அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள ஆலத்தியூர் காலனி தெருவைச் சேர்ந்தவர் வெள்ளையன். 52 வயதான இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய துணை செயலாளராக பொறுப்பு வகித்துவருகிறார்.
அதே பகுதியைச் சேர்ந்த அவருடைய உறவினரின் மகள் (11 வயது) தாய் தந்தையை இழந்து தனது பாட்டியுடன் வசித்து வருகிறார்.
வெள்ளையன் தனியாக இருந்தபோது, தனது வீட்டை சுத்தம் செய்ய அந்தச் சிறுமியை அழைத்துள்ளார். அப்போது வீட்டிற்கு வந்த அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய அவர் முயன்றுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமி, கூச்சல் போட்டதையடுத்து, அப்பகுதி மக்கள் அந்த சிறுமியை மீட்டு வெள்ளையனை பிடிக்க முயற்சி செய்துள்ளனர். அங்கிருந்து தப்பியோடிய வெள்ளையன், தளவாய் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
இதைத்தொடர்ந்து அரியலூர் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்(பொறுப்பு) மகாலட்சுமி வெள்ளையனை கைது செய்து விசாரணை நடத்திவருகிறார். மீட்கப்பட்ட சிறுமி, அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதையும் படிங்க: திருநங்கைக்கு பாலியல் தொல்லை; காவல் அலுவலர்கள் மீது நடவடிக்கை?