மீலாதுன் நபியையொட்டி விசிக தலைவர் தொல். திருமாவளவன் வாழ்த்துத் தெரிவித்து தனது ட்விட்டர் பதிவில், ”இஸ்லாமியர் யாவருக்கும் வாழ்த்துகள்! சகோரத்துவத்தை இன்றும் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்குரிய மகத்தான வழிகாட்டுதலை வழங்கிய மகான் நபிகள் நாயகம்.
இத்தகு மகத்தான தலைமைத்துவ ஆற்றல்வாய்ந்த மகானின் பிறந்தநாளான மீலாதுன் நாளை 'உலக சகோதரத்துவ நாள்'ஆகக் கடைப்பிடிப்போம்!" எனப் பதிவிட்டுள்ளார்.