அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள விளந்தை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் இளங்கோவன், சங்கர். இக்கிராமத்தில் இவர்கள் இருவருக்கும் சொந்தமாக தனித்தனி வீடுகள் உள்ளது. இந்த இரண்டு வீடுகளிலும் சுமார் 15 வருடம் பழமையான இரண்டு கிணறுகள் உள்ளன. தற்போது தொடர் மழை பெய்ததன் காரணமாக கிணற்றுக்கு மேல் வரை ஊற்றுநீர் வந்துள்ளது.
இந்நிலையில், ஒரே நேரத்தில் இரு கிணறுகளில் இருந்த தண்ணீர் திடீரென பலத்த சத்தத்துடன் 10 அடி ஆழத்திற்கு உள்வாங்கியது. இதில், கிணற்றின் சுற்றுச்சுவர் மண்ணில் புதைந்தது. இது குறித்து இளங்கோவன் வருவாய் அலுவர்களுக்கு தகவல் தெரிவித்தார். அதையடுத்து, சம்பவ இடத்திற்கு உடையார்பாளையம் கோட்டாட்சியர் பூங்கோதை, வட்டாட்சியர் குமரைய்யா ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
அதன்பின், வீட்டின் உரிமையாளர்களிடம் கிணற்றை என்ன செய்வது என்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். அப்பகுதியில் ஒரே நேரத்தில் இரு கிணறுகள் உள்வாங்கியது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:
ஆழ்துளைக் கிணறுகளை மூட முனைப்பு காட்டும் மாவட்ட ஆட்சியர்கள்!