ETV Bharat / state

காலை 7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7AM

ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

top ten news at 7 am  top ten news  top ten  top news  latest news  tamil nadu news  tamil nadu latest news  news update  தமிழ்நாடு செய்திகள்  இன்றைய செய்திகள்  இன்றைய முக்கியச் செய்திகள்  முக்கியச் செய்திகள்  காலை செய்திகள்  7 மணி செய்திகள்  செய்திச் சுருக்கம்
செய்திச் சுருக்கம்
author img

By

Published : Oct 31, 2021, 7:16 AM IST

1. இல்லம் தேடி கல்வி திட்டத்தின் சிறப்பு அலுவலராக இளம்பகவத் ஐஏஎஸ் நியமனம்

இல்லம் தேடி கல்வி திட்டத்தின் சிறப்பு அலுவலராக இளம்பகவத் ஐஏஎஸ்யை நியமனம் செய்து தமிழ்நாடு தலைமை செயலர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.

2. நவம்பர் 1ஆம் தேதியே 'தமிழ்நாடு நாள்' - போர்க்கொடி தூக்கும் ராமதாஸ்

தமிழ்நாட்டுக்கு பெயர் சூட்டப்பட்ட நாள் பிறந்த நாள் அல்ல என்றும் மொழிவாரி மாநிலங்கள் பிரிந்த நாளான நவம்பர் 1ஆம் தேதிதான் தமிழ்நாடு நாள் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

3. தீபாவளியில் இறைச்சி கடைகளுக்கு அனுமதி!

தீபாவளியில் தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உள்ள இறைச்சி கடைகள் திறக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.

4. பேரியம் கலந்த பட்டாசுகள் வெடிக்க தடை - தமிழ்நாடு அரசு எச்சரிக்கை

பேரியம் ரசாயனம் கலந்த பட்டாசுகள், சரவெடிகளை தயாரிக்க, விற்க, வெடிக்க உச்சநீதிமன்றம் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதை மீறும் பட்சத்தில் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு எச்சரித்துள்ளது.

5. கோயில் நிலம் ஆக்கிரமிப்பு - நில நிர்வாக ஆணையர் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு

சுமார் 200 ஏக்கர் நிலத்துக்கு உரிமை கோரி, ஸ்ரீபெரும்புதூர் பாப்பான் சத்திரத்திலுள்ள காசிவிஸ்வநாதர், வேணுகோபால சுவாமி கோயில் நிர்வாகம் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை மூன்று மாதங்களுக்குள் விசாரித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்கும்படி, தமிழ்நாடு நில நிர்வாக ஆணையருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

6. 10 கடற்கரைகளுக்கு நீலக்கொடி சான்றிதழ் பெற ரூ.100 கோடி ஒதுக்கீடு!

அழகிய கடற்கரைக்கான நீலக்கொடி சான்றிதழை தமிழ்நாட்டிலுள்ள 10 கடற்கரைகளுக்கு பெறும் திட்டத்திற்காக 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து சுற்றுச்சூழல் துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

7. தடை செய்யப்பட்ட ஹெலிகாப்டர் சென்னையில் முடக்கம்

சென்னையில் ஜெ.மெட்டாடி என்ற தனியார் நிறுவன கிடங்கில் வைத்திருந்த தடை செய்யப்பட்ட ஹெலிகாப்டரை அமலாக்கத்துறையினர் முடக்கியுள்ளனர்.

8. கரோனாவால் உயிரிழந்த பிரபல நடிகர்!

பாலிவுட்டின் மூத்த நடிகரான யூசுப் உசைன் கரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 73.

9. பிக் பாஸ் ஒளிபரப்பு நேரத்தை மாற்றியமைக்க ஆரி அர்ஜூனன் கோரிக்கை

பிக் பாஸ் பார்ப்பவர்களின் வாழ்வியல் சூழல் பாதிக்கப்படுவதால் ஒளிபரப்பு நேரத்தை மாற்றியமைக்க வேண்டும் என நடிகர் ஆரி அர்ஜுனன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

10. T20 WORLDCUP: மில்லரால் த்ரில் வெற்றிபெற்ற தென் ஆப்பரிக்கா!

டி20 உலகக்கோப்பையின் சூப்பர் 12 சுற்றுப்போட்டியில் இலங்கை அணியை தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.