ETV Bharat / state

காலை 7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7AM

ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

top ten news at 7 am  top ten news  top news  top ten  latest news  tamil nadu news  today news  tamil nadu latest news  தமிழ்நாடு செய்திகள்  இன்றைய செய்திகள்  இன்றைய முக்கியச் செய்திகள்  முக்கியச் செய்திகள்  அண்மை செய்திகள்  காலை செய்திகள்  காலை 7 மணி செய்திகள்  செய்திச் சுருக்கம்
செய்திச் சுருக்கம்
author img

By

Published : Oct 26, 2021, 7:03 AM IST

1. பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் குடும்பக் கட்டுப்பாடு வயது வரம்பு உயர்வு!

பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் பயனடையும் பயனாளிகள் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில், பெற்றோரின் குடும்ப கட்டுப்பாட்டுக்கான வயது வரம்பை 35-இல் இருந்து 40ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

2. கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு புதிய ரேஷன் அட்டை - தமிழ்நாடு அரசு அறிவுறுத்தல்

கணவனால் நிராதரவாகக் கைவிடப்பட்டு அல்லது மணவாழ்வு முறிவுற்று தனியாக வசிக்கும் பெண்கள் புதிய குடும்ப அட்டை கோரும்போது நீதிமன்ற விவாகரத்துசான்று போன்ற ஆவணங்கள் ஏதும் சமர்ப்பிக்க வலியுறுத்தாமல் புதிய குடும்ப அட்டை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.

3. தமிழ் முக்கியத்துவமற்ற மொழிப் பாடமா? - அமைச்சர் அன்பில் மகேஷ் காட்டம்!

சிபிஎஸ்இ பாடப்பிரிவுகளில் தமிழ் முக்கியத்துவமற்ற மொழிப் பாடமாக இணைக்கப்பட்டிருப்பது ஒன்றிய அரசு மேற்கொள்ளும் தேவையற்ற செயல் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

4. தீபாவளிக்கு சென்னையில் இருந்து 16,000 பேருந்துகள்!

தீபாவளி பண்டிகைக்கு சென்னையில் இருந்து 16 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

5. சசிகலாவை அதிமுகவில் சேர்க்க கேள்வி எழவில்லை - கே.பி.முனுசாமி

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது தொடர்பாக கேள்வி எழவில்லை என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

6. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: இருவர் அதிரடி கைது

கோடநாடு கொலை, கொள்ளைச் சம்பவத்தில் மூளையாக செயல்பட்டதாக ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபால், அவரது நண்பர் ரமேஷ் ஆகியோரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர்.

7. இரும்பு குழாய்கள், மோட்டார்களை திருடிய நான்கு பேர் கைது

இரும்பு குழாய்கள், மோட்டார்களை திருடி விற்பனை செய்து கஞ்சா புகைத்துவந்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

8. நடிகர் சிம்பு மீது தயாரிப்பாளர் மைக்கல் ராயப்பன் பரபரப்பு புகார்!

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள கூடுதல் ஆணையரை நேரில் சந்தித்து நடிகர் சிம்பு மீது, தயாரிப்பாளர் மைக்கல் ராயப்பன் புகார் அளித்திருக்கிறார்.

9. ஆளுநர் ஜக்தீப் தங்கர் மருத்துவமனையில் அனுமதி

மேற்கு வங்க ஆளுநர் ஜக்தீப் தங்கர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

10. மகளின் 'ஹூட்' செயலியை தொடங்கி வைத்தார் ரஜினிகாந்த்!

தனது மகள் சௌந்தர்யா தொடங்கியுள்ள ஹூட் எனும் குரல் சார்ந்த சமூக வலைதள செயலியை, நடிகர் ரஜினிகாந்த் நேற்று தொடங்கிவைத்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.