1964ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி திருச்சி ரயில்வே சந்திப்புக்கு வந்த கீழப்பழுவூர் சின்னச்சாமி, ‘தமிழ் வாழ்க! இந்தி ஒழிக!’ என முழக்கமிட்டபடி தீக்குளித்து, மொழிப் போராட்டத்தில் தனது உயிரை தியாகம் செய்தார்.
இதன் காரணமாக ஆண்டு தோரும் தமிழ்நாட்டின் அனைத்து கட்சிகளும் சேர்ந்து ஜனவரி 25ஆம் தேதியை மொழிப்போர் தியாகிகள் தினமாக அறிவித்து அதனை நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.
ஆண்டிற்கு ஒருமுறை இந்த சிலைக்கு மாலை அணிவித்து வரும் அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள், மொழிப்போர் தியாகத்தின் வடிவமாய் திகழும் சின்னச்சாமிக்கு மணிமண்டபம் கட்ட வேண்டுமென அரியலூர் மாவட்ட மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், மொழிப்போர் தியாகிகளுக்கு மணிமண்டபம் அமைத்தால் தமிழுக்காக உயிரைத் தியாகம் செய்த தியாகிகளை நினைவு கூறும் வகையில், வருங்கால சந்ததியினர் அறிந்துகொள்வர் என்று தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: மியாவாக்கி அடர்வனம் அமைக்கும் பணி மும்முரம்