கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் பல்வேறு தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
முடிதிருத்தும் தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், வேன் ஓட்டுநர்கள், சலவைத் தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தொழிலாளர்கள் வாழ்க்கை கேள்விக்குறியாக உள்ளது.
இந்நிலையில் அரசு தலைமை கொறடா ராஜேந்திரன் இன்று கடலூர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் சுமார் 500 தொழிலாளர்களுக்கு அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை வழங்கினார்.
இந்த ஊரடங்கால் முடிதிருத்தம் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும், எனவே அரசிடம் கூறி நிவாரணம் பெற்றுத்தர வேண்டுமென அப்போது அவர்கள் தலைமை கொறடா ராஜேந்திரனிடம் வேண்டுகோள் வைத்தனர்.
இதையும் படிங்க: தளர்வுகள் அளித்தும் தொழில்கூடங்கள் இயங்குவதில் சிக்கல்: விசைத்தறி தொழிலாளர்கள் வேதனை