உலகம் முழுவதும் பரவிவரும் கரோனா பெருந்தொற்றைத் தடுப்பதற்காகப் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டம், செந்துறை, ஆண்டிமடம் ஆகிய பகுதியில் உள்ள உணவு விடுதிகளில் வட்டாட்சியர்கள் ஆய்வுமேற்கொண்டனர்.
கை கழுவும் இடங்களில் கிருமிநாசினி சோப்புகள், கை கழுவும் திரவங்கள் கண்டிப்பாக வைக்க வேண்டும், உணவு பரிமாறப்படும் மேசை அடிக்கடி கிருமிநாசினி கொண்டு துடைக்க வேண்டும் என ஆய்வுமேற்கொண்டபோது வட்டாட்சியர் சந்திரசேகரன் வலியுறுத்தினார்.
மேலும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாத உணவகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தார். ஜெயங்கொண்டத்தில் நடைபெற்ற ஆய்வின்போது சுத்தம், சுகாதாரம் இல்லாத இரண்டு உணவகங்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.