ETV Bharat / state

அழகு சாதனவியல், சிகையலங்காரம் குறித்து இலவச பயிற்சி!

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்காக, அழகு சாதனவியல் மற்றும் சிகையலங்காரம் குறித்த இலவச பயிற்சி மற்றும் அது சார்ந்த வேலைவாய்ப்பு வழங்கவும் தாட்கோ நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

tahdco
tahdco
author img

By

Published : Feb 2, 2023, 1:51 PM IST

அரியலூர்: அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணக்கர்களுக்கு திறன் அடிப்படையில் பல்வேறு பயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது.

அதன் தொடர்ச்சியாக சென்னை மகா அழகு கலை பயிற்சி நிலையத்தின் (Maha Family Salon and Spa International Training Academy) மூலமாக புகழ் பெற்ற அழகு நிலையங்களில் பணிபுரியவும், அழகு சாதனவியல் மற்றும் சிகை அலங்காரம் (Cosmetology & Hair Dressing) சுய தொழில் செய்யவும் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

இப்பயிற்சிக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பைச் சார்ந்த பத்தாம் வகுப்பு படித்த 18 முதல் 30 வயது வரையுள்ள மாணக்கர்கள் விண்ணப்பிக்கலாம். 45 நாட்களுக்கு இப்பயிற்சி வழங்கப்படும். சென்னையில் பயிற்சி அளிக்கும் நிறுவனத்தில் தங்கி படிக்கும் வசதியும், இப்பயிற்சிக்கான அனைத்து செலவையும் தாட்கோ ஏற்கும்.

இப்பயிற்சியினை முடிக்கும் மாணக்கர்களுக்கு இந்திய தேசிய திறன் மேம்பாடு (NSDI- National Skill Developent of India) அங்கீகார தரச் சான்றிதழ் வழங்கப்படும். மேலும், இப்பயிற்சியினை பெற்றவர்கள் தனியார் அழகு நிலையங்களில் பணிபுரிய 100 சதவீதம் வேலைவாய்ப்பு அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இப்பயிற்சியை வெற்றிகரமாக முடிக்கும் மாணக்கர்களுக்கு ஆரம்ப கால ஊதியமாக 15,000 ரூபாய் முதல் 20,000 ரூபாய் வரை கிடைக்கும். அதேபோல் சுய வேலை வாய்ப்பு திட்டத்தில் அழகு சாதனவியல் மற்றும் சிகை அலங்காரம் தொழில் செய்ய தாட்கோ 2.25 லட்சம் ரூபாய் மானியத்துடன் கூடிய 10 லட்சம் ரூபாய் கடனுதவி வழங்கப்படும். இப்பயிற்சி பெற விருப்பமுள்ளவர்கள் www.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஒய்.எம்.சி.ஏ.கல்லூரியில் மாணவிக்கு பாலியல் தொல்லை - ரிலீஸ் ஆகிய மற்றொரு ஆடியோ

For All Latest Updates

TAGGED:

TAHDCO
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.