ETV Bharat / state

நீட் தேர்வால் மாணவன் தற்கொலை - உறவினர்கள் போராட்டம்! - உறவினர்கள் போராட்டம்

அரியலூர்: நீட் தேர்வுக்குத் தயாரான மாணவன் தற்கொலை செய்துகொண்ட நிலையில், மாணவனின் உடலை உடற்கூறாய்வு செய்யவிடாமல் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

vignesh
vignesh
author img

By

Published : Sep 10, 2020, 12:41 PM IST

அரியலூர் மாவட்டம் எலந்தங்குழி கிராமத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் மகன் விக்னேஷ் (19). இவர் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த நிலையில், நீட் தேர்வு அச்சம் காரணமாக நேற்று (செப்.9) கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். கிணற்றிலிருந்து மாணவனின் உடலை மீட்ட காவல்துறையினர் உடற்கூறாய்வுக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர்.

இருப்பினும் மாணவனை இழந்த பெற்றோர் உடற்கூறாய்வு செய்ய விடாமல், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டதால் உடற்கூறு செய்வதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. மேலும் அப்பகுதியில் பதட்டமான சூழல் நிலவி வருவதால் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து, நீட் தேர்வால் மன உளைச்சலுக்கு ஆளாகி உயிரிழந்த விக்னேஷின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தி, திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், பொது மக்கள் சார்பில் மவுன அஞ்சலி ஊர்வலம் நடைபெற்றது.

மருத்துவர்களை உருவாக்க மத்திய அரசு கொண்டுவந்துள்ள நீட் தேர்வு மாணவர்களின் உயிர்களை பலி வாங்கி வருகிறது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஏழை மாணவி அனிதா நீட் தேர்வால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. அனிதா, ரித்து, வைஷியா, சுபஸ்ரீ என நீட் தேர்வால் உயிரிழந்த மாணவர்களின் பட்டியலில், தற்போது மாணவன் விக்னேஷ் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில், தற்கொலை செய்துகொண்ட மாணவன் குடும்பத்துக்கு ரூ.7 லட்சம் நிவாரணம் மற்றும் அவரது குடும்பத்தில் தகுதி வாய்ந்த நபருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என, தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: ஆதரவற்றோரின் அடைக்கலம், “உங்கள் வீடு”!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.