அரியலூர் மாவட்டம் கோக்குடி கிராமத்தில் புனித அந்தோணியார் கோயில் பொங்கலை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம் . இந்நிலையில் இந்தாண்டு அக்கிராமத்தில் உள்ள பள்ளி மைதானத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியை அரசு தலைமை கொறடா ராஜேந்திரன், அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்னா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இப்போட்டியில் 450 காளைகள், 250க்கும் மேற்பட்ட காளையர்கள் களத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காளைகளை அடக்கிய காளையர்கள், காளையர்களுக்கு அடங்காத காளைகளின் உரிமையாளர்களுக்கு என பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் இப்போட்டியில் அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலூர் ஆகிய சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள மாவட்டங்களில் இருந்து காளைகள் வந்தன. ஜல்லிக்கட்டுப் போட்டியை முன்னிட்டு அங்கு 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: வீரர்களை அலறவிட்ட குலமங்கலம் காளை: காரை பரிசாக வழங்கிய ஓபிஎஸ்!